தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய, 'கலா உத்சவ்' போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய அளவிலான, ‘கலா உத்சவ்’ போட்டியில், தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இசை பிரிவில், தேசிய அளவில், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மத்திய அரசு, ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை, ஆண்டு தோறும் நடத்துகிறது.

இதற்காக, இசை, நடனம், ஓவியம், நாடகம், காண்கலை என, பல தலைப்புகளில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் அளவிலும், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில், தேர்வானோர், மாநில போட்டியில் அனுமதிக்கப்படுகின்றனர். அதில், தேர்வு செய்யப்படுவோருக்கு, தேசிய அளவில் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய போட்டி, கடந்த, 3 முதல், 6ம் தேதி வரை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து, நடன போட்டியில் திருச்சி; இசையில், நாகை; நாடகத்தில், திருவண்ணாமலை மற்றும் காண்கலையில், திருச்சி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில், இசை போட்டியில் பங்கேற்ற, நாகை மாவட்ட மாணவர்கள், தேசிய அளவில் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வா, 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, வெள்ளி கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த குழுவில், மாற்று திறனாளி மாணவர் ஒருவரும் இடம் பெற்றுஉள்ளார்.

‘கலா உத்சவ்’ போட்டி வரலாற்றில், தேசிய அளவிலான போட்டியில், தமிழக மாணவர்கள், இரண்டாம் பரிசு பெற்றது இதுவே முதல் முறை. கடந்த, 2017ல், நாமக்கல் மாணவர்கள், நாடக பிரிவில், தேசிய அளவில் மூன்றாம் பரிசு பெற்றனர்.

இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின், தமிழக இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறுகையில், ”தமிழக அரசின் சார்பில், மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்க, பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
”வரும் ஆண்டுகளில், மாணவர்களின் சாதனை தொடர தேவையான, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>