சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தெரியும்: பிரதமர் மோடி!

சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் 'வணக்கம்' மட்டுமே சொல்லத் தெரியும்: பிரதமர் மோடி!

சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தெரியும்: பிரதமர் மோடி!

சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி, அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்கும் வகையில் டெல்லியில் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் கேள்வி கேட்ட மாணவர்களுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவர், ‘‘நாட்டின் பிரதமராக இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. உங்களில் ஒருவராகக் கலந்து கொண்டுள்ளேன். மாணவர்கள் என்னை நண்பர்களாக எண்ணி கேள்வி கேட்க வேண்டும். தேர்வு பயத்தை போக்குவது மிகவும் அவசியமானது’’ எனக் கூறினார்.

அப்போது நாட்டின் மிகவும் மிக தொன்மையான மொழி எது என மாணவர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி.

அதுமட்டுமின்றி உச்சரிப்பதற்கு மிகவும் அழகான மொழி. ஆனால் அந்த மொழியில் என்னால் வணக்கம் மட்டும்தான் சொல்ல முடியும். அதற்கு மேல் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே முழுவதுமாக இந்தி மொழியிலேயே பிரதமர் மோடி பேசினார். மற்ற மொழியில் மாணவர்களிடம் பேச முடியாததற்காக அவர் மன்னிப்பு கோரினார். தனது பேச்சு மற்றும் விவாதங்கள் மாணவர்களுக்கு அவரவர் மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தி இந்து

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: