500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…!

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்...!

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…!

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் அசைவற்று போயுள்ளது என்றே கூறவேண்டும்.

இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பொது மக்கள் மிகுந்த துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதன் தாக்கம் இந்தியர்களை தாண்டி வெளிநாட்டவர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றியதற்கான சான்றிதழ் இல்லாத காரணத்தினால் 500 மற்றும் 1,000 ரூபாய் நாயணத்தாள்களை மாற்ற முடியாமல், இலங்கைத் தமிழர் ஒருவர் இந்தியாவில் பரிதவித்துள்ளார்.

இது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் பரமேஸ்வரன் கடந்த 28ஆம் தேதி தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார். அவர் தனது செலவுக்காக, ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான கனடா டொலரை இந்திய ரூபாவாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில, திருப்பதி சென்ற பரமேஸ்வரன் கடந்த 9ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு திரும்பிய அவர், செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்ற முடியாமல் பரிதவித்துள்ளார்.

தன்னிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்ற போதும் தன்னால் பணத்தை மாற்ற முடியாம் போயுள்ளது. 19ஆம் திகதி நாங்கள் மீண்டும் கனடா புறப்பட இருக்கிறோம்.

நாங்கள் இந்தியா வரும்போது, எங்களுக்கு கிடைக்கும் குறைந்த நாட்களில் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக திட்டமிட்டு இருந்தோம் என்றார் பரமேஸ்வரன்.

இதுபோல் ஆயிரக்கானக்கான வெளிநாட்டவர் துன்பதிற்கு உள்ளாகியுள்ளனர் என்பது நிதர்சனம்.


உலகத் தமிழர் பேரவையில் உறுப்பினராகி, ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்குவோம்! இப்பொழுதே இணைவோம்!! ….. இணைய இங்கு அழுத்தவும்!!!

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே ந... இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 21/10/1987 ) இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்பட...
இந்திய ஊடகவியலாளர் சபை (Indian Journalist Associat... இந்திய ஊடகவியளாளர் சபை (Indian Journalist Association - IJA) நிர்வாகிகள் கூட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்ப்பு! இந்திய ஊடக...
இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் ல... இந்தியா பிரதமருக்கு மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கொடுத்த தமிழ் அதிர்ச்சி மருத்துவம்! சிங்கப்பூரில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக இருக்கிறது ...
“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என... "இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா" என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? - செந்தமிழினி பிரபாகரன, கனடா உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் ...
Tags: