இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார்.

2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறார். இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் கையிலிருந்து பெற்றார். வழங்கப்பட்டதில் முதல் விருது அவருக்குதான் வழங்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


மேலும், தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக், யோகா கலைஞர் நானம்மாள் உள்ளிட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருதுகள் வழங்கப்பட்டன. 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நாகசாமி – விருது: பத்ம பூஷண்

தமிழ்நாடு தொல்லியல் துறை நிறுவனர்களில், முதன்மையானவர்; அதன் முதல் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை ராமச்சந்திரன் சமஸ்கிருத அறிஞர். சமஸ்கிருதத்தின் மீது இவருக்கு, மாணவ பருவத்தில் இருந்தே ஆர்வம் இருந்தது. சென்னை பல்கலையில், சமஸ்கிருதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சென்னை பல்கலையின், தொல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றிய நீலகண்ட சாஸ்திரியின் தாக்கத்தால், இவருக்கு தொல்லியல் துறையுடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்திய தொல்லியல் ஆய்வகத்தில், ஆழ்ந்த பயிற்சி பெற்ற இவர், சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக பணியாற்றியவர். கலைகள் மற்றும் தொல்லியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து, புனே பல்கலையில், முனைவர் பட்டம் பெற்றார். சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா, ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கத்தை இவர் தான் ஏற்படுத்தினார். பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

ஞானாம்பாள் – விருது: பத்ம ஸ்ரீ

கோவையில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், 97 வயதிலும் யோகாவில் கலக்குகிறார். இந்தியாவின் மூத்த யோகா பயிற்சியாளராக கருதப்படுகிறார். இப்போதும், கடினமான யோகாவை, சர்வ சாதாரணமாக செய்து, அசத்தி வருகிறார். 50க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்கிறார். 8 வயதிலிருந்தே யோகா செய்து வருகிறார்.

திருமணத்துக்குப் பின், மாமனாரிடம் இருந்து யோகாவை முறையாகக் கற்று, பிறருக்கு அதை பயிற்றுவிக்க தொடங்கினார். இன்று வரை ஒருநாள் கூட யோகா செய்யாமல் இருந்ததில்லை.

இதுதான் தன் இளைமையின் ரகசியம் என குறிப்பிடுகிறார். இதுவரை, 600 யோகா ஆசிரியர்களை உருவாக்கியுள்ளார்.

வாசுதேவன் – விருது: பத்ம ஸ்ரீ

மதுரையில் உள்ள தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லுாரியின் டீன். இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, சாலைகளை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார்.

நாட்டின் முதல் பிளாஸ்டிக் சாலையை உருவாக்கியவர். இவரது கண்டுபிடிப்பால், பிளாஸ்டிக் பயன்படுத்தி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், 5,000 கி.மீ.,க்கு மேற்பட்ட சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சிறந்து விளங்கியதால், இந்த விருது வழங்கப்பட்டது.

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் – விருது: பத்ம ஸ்ரீ

தமிழ் நாட்டுப்புற பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில், ஈடுபட்டு வருபவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். நாட்டுப்புறப் பாடல்களை பிரபலமாக்கியதில், விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் தம்பதிக்கு முக்கிய இடம் உண்டு. மதுரை காமராஜர் கல்லுாரி முன்னாள் பேராசிரியையான இவர், நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

ராமாயணத்தை நாட்டுப்புற வடிவில், ‘கிராமிய ராமாயணம்’ என படைத்து வழங்கியவர். நாட்டுப்புறக் கலைகள் வளர்ந்தால், நாடே வளரும் என்பது இவரது கருத்து.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: