பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது! 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது!

இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரசு 25-01-2019 அன்று வெளியிட்டது. பாரத ரத்னா மட்டுமில்லாமல், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி (அறுவை சிகிச்சை) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: