தமிழ்நாட்டுக்கு 28 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு; மேகதாது விவகாரம் – ஒருமித்த கருத்து அவசியம்: காவிரி மேலாண்மை ஆணையம் விளக்கம்..!

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

கொரோனா காரணமாக, ஓராண்டாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பங்கேற்ற அதிகாரிகள், இன்றைய கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கின்றனர். இதேபோல பிற மாநிலங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. செப்.23 வாராயோ 37.3 டிஎம்சி காவிரி நீர் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா செயல்படுத்தவில்லை. கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் நீர் திறக்கப்படவில்லை.

அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கார்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு 28 டிஎம்சி காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது பற்றி விவாதிக்கப்படும். காவிரி பாசன நிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: