தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை; உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை; உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா, அணை கட்டி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.

தென்பெண்ணையில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகா அரசு பெறவில்லை என்றும் 1892-ம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு செயல்பட்டிருந்ததாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (நவ.14) தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவில், தென்பெண்ணை கிளை நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை. தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: