பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசிற்கே, ஏன் உலகத்திற்கே மக்களிடம் எப்படி வரி விதிக்கப்பட வேண்டும் என காட்டிய தமிழ் பெரியோர்!

வருமான வரியை ஒழுங்காக கட்டும் பொறுப்புள்ள குடிமகன்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மத்திய நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன், வரி வசூலிப்பது தொடர்பாக தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு நூலில் வந்துள்ளவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.

அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறும் வகையில் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் அமைந்துள்ளது .

இதை கேட்ட உடனேயே பிரதமர் மோடி உள்பட அனைவரும் கைதட்டிசிரித்து ஆரவாரம் செய்தனர். இதனால் அவை சிரிது நேரம் சிரிப்பலையாக காணப்பட்டது. அதன்பின்னர் கூறிய நிர்மலா சீதாராமன், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையர் கூறிய அந்த அற்புதமான அறிவுரையை இந்த அரசும் கேட்டு நடக்கிறது. யானை புகுந்த விளை நிலம் போல் வரி இருக்காது என்றார். கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிசிராந்தையார் தமிழ் பாடல்

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

…..

‘’காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே!’’
திணை: பாடாண்
துறை: செவியறிவுறு.

மக்கள் அரசு, வரியை
எப்படி முடிவு செய்ய வேண்டும்?

நன்கு விளைந்த நெல்லை அறுத்துக்
கவளமாக யானைக்குக் கொடுத்தால்
ஒரு மாவிற்கும் குறைந்த நிலத்தில்
விளைந்த கதிரும்
பல நாளைக்கு ஆகும்;

நூறு செய் நிலந்தான்;
ஆனால் அதற்குள் யானை
தனியாக நுழைந்து உண்ணுமானால்
அதன் வாயில் புகும்
நெல்லைக் காட்டிலும்
நான்கு கால்களால் கெடுவது மிகுதியாகும்.

இதுபோலவே
அறிவுள்ள அரசன்
வரி வாங்கும் முறையை அறிந்து
வரி வாங்கினால்
அவன் நாடு வருத்தம் இல்லாமல்
கோடி பொருளைக் கொடுக்கும்
தானும் மகிழ்ச்சியாகத் தழைக்கும்

ஆள்வோன் அறிவுச் சிறுமையாளனாகி,
நாள் தோறும் நன்மை தரும்
நேர்மையான வழியைக் கூறாமல்
ஆளும் அவன் விரும்புவதையே
தானும் கூறும்
ஆரவாரமிக்க
அரசுப் பணியாளருடன் சேர்ந்து
மக்களின் அன்பு கெடுமாறு
பெரும் பொருள் திரட்ட விரும்பினால்
யானை புகுந்த வயல் போல
அவனும் உண்ண மாட்டான்;
அவன் ஆளும் நாடும் அழியும்…

பிசிராந்தையார் தமிழ் பாடலை பட்ஜெட் உரையில் சுட்டிக்காட்டியதற்கு நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>