Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

ஒரு பெருநிலக்கிழார் தன்னுடைய நிலத்தில் 1935ம் ஆண்டு ஆழ் குழாய் கிணறுகள் தோண்டுகிறார். அப்போது கறுப்பு நிறத்திலான கட்டி கட்டியான ஒரு பொருள் கிடைக்கிறது. இதனை கறுப்பு களிமண் என்று நினைத்து அப்பொழுது யாரும் பொருட்படுத்த வில்லை. அதை தூக்கி எரிந்துவிட்டு வேலையை தொடர்கிறார்கள். ஆனால் அந்த பொருள் காய்ந்த பிறகு தீப்பிடித்து எரிகிறது. இது ஏதோ ஒரு எரி பொருள் என உணர்ந்த அந்த பெருநிலக்கிழார் அதை ஆளும் பிரிட்டிஷ் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.

பல கட்ட சோதனைகளுக்கு பிறகு அந்த பொருளை ‘பழுப்பு நிலக்கரி ‘ என கண்டறிகின்றார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு 1943-47ல் பல ஆழ் குழாய் கிணறுகளை இங்கு அரசு தோண்ட துவங்கியது. நெய்வேலி என்ற கிராமத்தில் (தற்போது அந்த கிராமமே இல்லை) கோஷ் என்பவர் தலைமையில் ஆழ் குழாய் கிணறு தோண்டும் பணி துவங்கியது. இந்த பகுதிகளில் தோண்டப்பட்ட ஆழ் குழாய் கிணறுகளின் மூலம் இந்தப் பகுதியில் இருக்க கூடிய நிலக்கரி வளம் உறுதி செய்யப்பட்டது.

Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

1953ம் ஆண்டு தமிழக அரசு அங்கு நிலக்கரி தோண்டும் பணியை துவங்கியது. 1955ம் ஆண்டு இதை மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றிவிடுகிறார் முதலமைச்சர் காமராசர்.

1956ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுகிறது (NLC) தென் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனம் NLC.

என்.எல்.சியின் மொத்த மின் நிறுவுத்திறன் 4289 மெகாவாட் ( NLC) யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 100% தமிழகத்திற்கே கொடுக்கப்பட்டால் நம்மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை NLC நிறுவனம் ஒன்று மட்டுமே பூர்த்திசெய்யும்). ஆனால் தற்போது தமிழ்நாட்டிற்கு கிடைப்பது 1910 மெகாவாட் மட்டுமே. மீதம் உள்ள மின்சாரம் மற்ற தென் இந்திய மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
60 ஆண்டுகளை கடந்த NLC நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களுள் ஒன்று.

கடந்த ஆண்டு என்.எல்.சி ஈட்டிய லாபம் மட்டும் 1500 கோடி ரூபாய்.

இந்த மாபெரும் நிறுவனத்தை அமைக்க 1942ல் தனது 600 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த பெருநிலக்கிழார் ஜம்புலிங்க முதலியாரின் நினைவு தினம் இன்று.

இன்று என்.எல்.சி என்ற ஒரு மாபெரும் நிறுவனமும், நெய்வேலி என்ற ஒரு நகரமும் தோன்ற காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியாரின் வாரிசுகள் வறுமையில் வாழ்கின்றனர்.

2013ம் ஆண்டு நெய்வேலி இரட்டைப் பாலத்தின் மீது ஜம்புலிங்க முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜம்புலிங்க முதலியாரின் மகள் வழி பேரனான அமரன், உள்ளிட்ட உறவினர்களும் NLC அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைதான் பரிதாபகரமானது. தற்போது கடலூரில் வசித்து வரும் அவர்கள், ”நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நன்கு படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை. நீங்களாக வழங்கினால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று வாய்விட்டு கேட்டே விட்டனர்.
இதைப் பற்றி நேரடியாக பதில் எதையும் தரவில்லை என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர். அதனால், நிருபர்கள் இதைப் பற்றி கேட்க, ”மனு கொடுத்தால் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று வழக்கமானதொரு பதிலை தந்துவிட்டு நகர்ந்துபோனார்.

ஜம்புலிங்க முதலியார் போலவே பல பேர் இந்த நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்காக தங்களின் விளைநிலங்களை கொடுத்துள்ளனர். சிலர் தானமாகக் கொடுக்க, பலர் அன்றைய சூழலில், ஏதோ அரசாங்கமாக பார்த்துக் கொடுத்த பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு தங்களின் நிலத்தைக் கொடுத்து வெளியேறினர். இப்படி நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைக்கு பரிதாப நிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுள்ளனர்.

அப்போது சுரங்கம் தோண்டவும், மின் நிலையம் அமைக்கவும் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களுள் எனது கிராமமும் ஒன்று. அம்மண்ணில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த எம் மக்களுக்கு இன்றுவரை நியாயம் மறுக்கப்பட்டே வருகிறது. உச்சநீதிமன்றம்வரை போய் நியாயம் கேட்டோம். மண்ணின் மைந்தர்களுக்கே வேலையில் முன்னுரிமை என உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது.

ஆனால் இன்றுவரை என்.எல்.சி நிறுவனம் நீதிமன்ற தீர்ப்பை கண்டுகொள்ளவே இல்லை. இந்திய பேரரசை எதிர்த்து சாதாரண சில குக்கிராமங்களால் என்ன செய்துவிட முடியும்?

என் தாத்தா காலத்தில் என்.எல்.சிக்காக வீடு, நிலங்களை இழந்தோம். ஆனால் அதற்கான நீதி மட்டும் என் தந்தை காலத்தையும் தாண்டி என் காலத்திலும் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஆனால் இன்று நெய்வேலி நகரில் தெருவெல்லாம் இந்தியில் பெயர் பலகை. இந்தி பேசும் நிறைய பணியாளர்கள் நிறுவனத்திலும், நகரிலும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.

உள்ளூரிலேயே இவ்வளவு பெரிய நிறுவனத்தை வைத்துக்கொண்டு அந்த பூமிக்கு சொந்தமான பூர்வ குடிகளான எங்கள் மக்கள் இன்று வேலை வாய்ப்பை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். ஆமாம். எங்களுக்கு நீதி இன்றுவரை மறுக்கப்பட்டே வருகிறது.


உலகத் தமிழர் பேரவை – யில் உறுப்பினராக…. இங்கே அழுத்தவும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: