கோலார் தங்க வயலில், “புதிய கர்நாடகத் தமிழர் கட்சி” தொடக்கம்!

கோலார் தங்க வயலில், “புதிய கர்நாடகத் தமிழர் கட்சி” தொடக்கம்!

கர்நாடகத் தமிழர்களின் அடிப்படை அரசியல், கல்வி, சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காக கோலார் தங்க வயலில் புதிய கர்நாடகத் தமிழர் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இக்கட்சி நிர்வாகிகள் வருமாறு:-

தலைவர்-தி. வேளாங்கண்ணி பால்ராஜ்,
துணை தலைவர்கள்-பின்டே பெலிக்ஸ் விக்ரம்,
பொதுச்செயலாளர்-முனைவர்.எல்.இராமு,
மகளிர் அணி செயலாளர்-கலைவாணி ஸ்ரீதர்,
இணைச்செயலாளர்கள்-தங்கவயல் கலைதாசன்,
செல்வம், வினோத்குமார்,
பொருளாளர்-எல். ராஜ்குமரேசன்.

கோலார் தங்கவயல் நகராட்சிக்கு விரைவில் நடைபெறும் தேர்தலில் புதிய கர்நாடகத் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. நகராட்சியில் 35 வார்டுகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தலில் களம் காண விருப்பமுள்ள தமிழர்கள், கோலார் தங்கவயல் குடிமக்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம் என்றும் இது தொடர்பாக தி. வேளாங்கண்ணி பால்ராஜ் -9845616114, முனைவர்.எல்.இராமு -9880047250, பின்டே பெலிக்ஸ் -8861839069, எல்.ராஜ்குமரேசன் -9019551369, கலைவாணி ஸ்ரீதர் -9738279058 ஆகியோரிடம் செல்லிடப்பேசியில் விவரங்களை கேட்டறியலாம் என்றும் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: