கேரள அமைச்சர் மணியின் ‘திமிரான’ பேச்சு – போராடும் பெண்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்!

கேரள அமைச்சர் மணியின் 'திமிரான' பேச்சு -  போராடும் பெண்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்!

கேரள அமைச்சர் மணியின் ‘திமிரான’ பேச்சு – போராடும் பெண்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்!

மூணாறு, கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக மூணாறில் போராட்டம் நடத்திய பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது; அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடந்த 2015ல் போனஸ், சம்பளம் கேட்டு மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் போராடினர். சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் இவர்களை, மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி இழிவாக பேசினார்.

‘பதவியை ராஜினாமா செய்து, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்தி மூணாறில் பெண்கள் உரிமை அமைப்பு பொதுச் செயலர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் கவுசல்யா, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கோமதி ஆகியோர் ஏப்., 25 முதல் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களுக்கு காங்.,– பா.ஜ., உட்பட கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. நேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உடல் நிலையை டாக்டர் ஜினு பரிசோதித்தார். அதில், மூன்று பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற டாக்டர் அறிவுறுத்தினார்.

அதற்கு கோமதி, கவுசல்யா உடன்படாத நிலையில், ராஜேஸ்வரி தயாரானார்; அவரை அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மதியம் 2:௦௦ மணிக்கு கோமதி, கவுசல்யா உடல் நிலை தளர்ந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்; அதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நுாறுக்கும் மேற்பட்ட போலீசார் பந்தலுக்குள் நுழைந்து, இருவரையும் துாக்க முயன்றனர். அங்கிருந்த கேரள காங்., பொது செயலர் லதிகாசுபாஷ், அரசியல் குழு உறுப்பினர் ஷானிமோள் உஷ்மான், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் போலீசாரை எதிர்த்தனர். ஆனால், இருவரையும் அடிமாலி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

அங்கு கவுசல்யா சிகிச்சைக்கு ஒத்துழைத்தார்; மாலை ௬:௦௦ மணி வரை, கோமதி சிகிச்சை பெற மறுத்துவிட்டார். மூவரும் மருத்துவமனையில் உள்ளதால், பெண்கள் உரிமை அமைப்பு பொருளாளர் ஸ்ரீலதா உண்ணாவிரதத்தை துவக்கினார். இதற்கிடையே இரவு ௮:௦௦ மணிக்கு, மூவரும் போராட்ட பந்தலுக்கு திரும்பி உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: