தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

சாகித்ய அகாடமி அமைப்பு, ஆண்டு தோறும், 24 மொழிகளில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களுக்கு, விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இது, இலக்கியத் துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் கூடிய, சாகித்ய அகாடமி அமைப்பின் நிறுவன தலைவர், விஸ்வநாத் பிரசாத் திவாரி உள்ளிட்ட தேர்வு குழுவினர், இந்த ஆண்டுக்கான, பால் சாகித்ய புரஸ்கார் விருது, யுவ புரஸ்கார் விருதுகளுக்கு தேர்வானோரின் பெயர்களை அறிவித்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழில், பால் சாகித்ய புரஸ்கார் விருதுக்கு, வேலு சரவணனும்; யுவ புரஸ்கார் விருதுக்கு, ஜெயபாரதியும் தேர்வு செய்யப்பட்டனர். இதில், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக ஆற்றிய ஒட்டு மொத்த பங்களிப்புக்காக, வேலு சரவணனை, குழுவில் இடம் பெற்ற, வி.அண்ணாமலை, ஆர்.இளங்கோவன், எம்.பழனியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். 35 வயதுக்குட்பட்ட, சிறந்த எழுத்தாளர்களை சிறப்பிக்க, யுவ புரஸ்கார் விருது, ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ என்ற, கவிதை தொகுப்புக்காக, மனுஷி என்ற ஜெயபாரதிக்கு வழங்கப்படுகிறது.

இவரை, பி.மதிவாணன், பி.செல்வபாண்டியன், பிரபஞ்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர், தேர்ந்தெடுத்தனர் இதேபோன்று, 24 மொழிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு, டில்லியில் நடக்கும் விழாவில், செப்பு பட்டயம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பரிசு வழங்கப்படுகிறது.

கவிஞர் மனுஷி பாரதி பெண்களுக்கான இருப்பு, அவர்களின் உணர்வுகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆகியவற்றை கவிதைகள், சிறுகதைகளில் பதிவு செய்து வருகிறார். குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதைத் தொகுப்புக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலு சரவணன், புதுச்சேரி பல்கலையின் நாடகப் பள்ளியில், பகுதி நேர விரிவுரையாளராக உள்ளார். வேலு சரவணன் குழந்தைகள் உலகில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர். புதுவை பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.

‘ஆழி’ என்ற நாடகக் குழு மூலம், சிறுவர்களுக்கான, கிராமியம் சார்ந்த நாடகங்களை நடத்தி வருகிறார். இவருடைய கடல் பூதம், குதுாகல வேட்டை என்ற, இரு சிறுவர் நாடகங்களும், 2,000 தடவைக்கு மேல் மேடையேறியுள்ளன.

குழந்தைகளுக்கான பாடங்களை நாடகங்கள், கதைகள் வடிவில் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகளை பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறார். குழந்தைகளுக்கான சிறந்த நாடக கலைஞராக இவரை சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன. குழந்தைகள் இலக்கியத்துக்காக வேலு சரவணன் அளித்திருக்கும் ஒட்டு மொத்த பங்களிப்புக்காக பால சாகித்ய அகாடமி விருது வேலு சரவணனுக்கும் தமிழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: