பெங்களூரில் ஜூன் 16-இல் 13-ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு!

பெங்களூரில் ஜூன் 16-இல் 13-ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு!

பெங்களூரில் ஜூன் 16-இல் 13-ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு!

பெங்களூரில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெறவிருக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


மலேசியாவில் 1974-ஆம் ஆண்டு வீரப்பனாரால் தொடங்கப்பட்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13-ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, பெங்களூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் ஜூன் 16, 17ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கர்நாடக கிளைச் செயலாளர் சு.சுந்தரவேலு செய்தியாளர்களிடம் கூறியது:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13-ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, கர்நாடக கிளையின் சார்பில் பெங்களூரில் ஜூன் 16, 17ஆகிய நாள்களில் நடத்தப்படவிருக்கிறது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முதல்வர் சி.இராமமூர்த்தி மாநாட்டின் தலைவராக செயல்படுகிறார்.

இரு நாள்கள் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பெங்களூரு மாநகராட்சி மேயர் ஆர்.சம்பத்ராஜ், இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், இயக்கத் தலைவர் மலேசியா ப.கு.சண்முகம், ஆசிய ஒன்றிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இரா.மதிவாணன், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.சுரேஷ்குமார், வி.கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், எம்.பி. பி.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், கலையரங்கம் உள்ளிட்டவை இடம்பெறவிருக்கிறது.

யுனெஸ்கோவில் அங்கம் வகிக்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கர்நாடகக் கிளை 1980-களில் சி.இராமமூர்த்தியால் தொடங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மாபெரும் கூட்டம் நடத்தப்பட்டது.

கர்நாடகத்தில் முதல்முறையாக உலக அளவிலான மாநாடு நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு, 2014=இல் ஜெர்மனியிலும், 2016-இல் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் நடக்கவிருக்கிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே, தென் ஆப்ரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கம்போடியா, மியான்மர், மோரீசஸ் உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து 75 வெளிநாட்டினர் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். தமிழகம், மும்பை பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் பெங்களூரு, மைசூரு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 17-ஆம் தேதி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், 94 நாடுகளுக்கான பொறுப்பாளர்களின் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்மொழி, தமிழர் பண்பாட்டை கட்டிக் காப்பாற்றவும், தமிழர்களிடையே சமூக கூட்டுறவை மேம்படுத்தவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இயக்கத்தின் முயற்சியால் தென் ஆப்பிரிக்கா, மியான்மர், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளில் தமிழ் தெரியாத தமிழர்களுக்கு தமிழ் கற்றுத் தரப்படுகிறது என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: