ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

Home Ministry, Sanjay Arora, ITBP DG
 
புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர்.
latest tamil news

இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் டி.ஜி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்றி : தினமலர்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: