பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!

பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!

பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி கிராமத்தில் 22.07.1958-ல் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய கடுமையான உழைப்பும் கண்டுபிடிப்புகளும் அவரின் தனித்தன்மையை அடையாளம் காட்டின. இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய மயில்சாமி, 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஆரம்பக் காலங்களில் ஐ.ஆர்.எஸ்.1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி திட்டங்களில் மேலாளராகவும் 1954-ல் இன்சாட்- 2சி செயற்கைக் கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 மற்றும் செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பிய மங்கல்யான் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக் கோள்களின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். சந்திராயன்-2 திட்டத்திலும் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சந்திராயன்-2 செயற்கைக் கோள் வரும் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் 75-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். `வளரும் அறிவியல்’ என்ற அறிவியல் மாத இதழில் கௌரவ ஆசிரியராக உள்ளார். கட்டுரையாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை அடையாளம் கொண்டவர். அழகு தமிழில் அறிவியலை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்த 36 ஆண்டுகளாகப் பெங்களூரு இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள மயில்சாமி அண்ணாதுரை இன்றுடன் (31.07.2018) ஓய்வு பெறுகிறார்.

மயில்சாமி அண்ணாதுரை (பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி – பொள்ளாச்சி – கோயம்புத்தூர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர். தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிகிறார்.

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.

அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், “கையருகே நிலா” என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், “கையருகே செவ்வாய்” என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.

தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

1958ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் திரு. மயில்சாமி ஆசிரியருக்கும் திருமதி. பாலசரசுவதி அம்மையாருக்கும் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்து முடித்தார்.

1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின், பின் 2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள்ப்பட்டாளத்தின் தலைமைத் திட்ட இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

இன்னும் பத்து ஆண்டுகள் இவரது செயல் முறை ஆய்வுப்பணிகள் தொடர வாய்ப்புகள் உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனது அறிவியல் பணிக்கு வெளியில் தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். ‘வளரும் அறிவியல்’ என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர். மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர். சனி, ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் முகநூலின் மூலம் இளைய சமுதாயத்திடம் தொடர்பு கொண்டு கணிணி வாயிலாய், அறிவியல் பார்வை மற்றும் சமூகப் பணியுடன் தமிழார்வத்தையும் ஊக்குவித்து வருகிறார்.

இந்திய நகரங்களின் பல தமிழ்ச்சங்கங்களிலும், அமெரிக்க மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளிலும் அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று. இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும், “அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பும், அறிவியல் பணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: