மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு

மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பதவியேற்றார்.

மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும் கவனித்து வந்தார். இந்நிலையில், மணிப்பூர் மாநில புதிய கவர்னராக தமிழகத்தை சேர்ந்த இல.கணேசனை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.


latest tamil news

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் 17வது கவர்னராக இல.கணேசன் பதவியேற்றார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். பா.ஜ., தேசியக் குழு உறுப்பினர், தமிழக பா.ஜ., தலைவர், எம்.பி., என பல பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

நன்றி :தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: