‘‘ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’’ – மத்திய பட்ஜெட் 2020!

‘‘ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’’ – மத்திய பட்ஜெட் 2020!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் ‘பூமி திருத்தி உண்’ என்னும் அவ்வை ஆத்திச்சூடியின் வரிகளை மேற்கோள் காட்டினார்.

பூமி திருத்தி உண் – பொருள் :

நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து’ என்ற திருவள்ளுவரின் குறளை தனது உரையில் மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், நாட்டின் வளத்தை மேம்படுத்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நோய் இல்லாமை, நல்ல பொருளாதார வளம், விளைச்சல், இன்பமான வாழ்வு, பாதுகாப்பான சூழல், என இந்த ஐந்து குணங்களும் ஒரு நாட்டிற்கு அழகாகும் என்பது அக்குறளின் பொருள் ஆகும்.

நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில்,

சென்னை – பெங்களூரு இடையே மற்றும் டெல்லி – மும்பை இடையே வர்த்தக வழித்தடங்கள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலக தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். இதில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.

மேலும் பல அறிவிப்பை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: