தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

இந்திய தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 18.03.2017 அன்று மொட்டை போட்டு போராட்டத்தை பொதுமக்கள் யாவரையும் ஈர்த்த தமிழக விவசாயிகள். நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய – தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நடைபெறும் போராட்டம், சனிக்கிழமை மேலும் வலுப்பெற்றது. இதையொட்டி, விவசாயிகள் 17 பேர் மொட்டை அடித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.


என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தில்லியில் கடந்த 14.03.2017 அன்று தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பெண்களும் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, தில்லியில் பிரதமர் வீடு அருகே மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணக் கோலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், சட்டை அணியாமல் உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டும் கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடியும் அமர்ந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாள்களில் இலை தழைகளை அணிந்து கொண்டும், நெற்றியில் பட்டை நாமம் போட்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தில்லியில் வாழ்ந்துவரும் தமிழ் குடும்பத்தினர், தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தமிழக விவசாயிகளைச் நேரில் சந்தித்து ஆதரவு தருகின்றனர். இந்நிலையில், ஜந்தர் மந்தர் சாலையில் 18.03.2017 அன்று விவசாயிகள் 17 பேர் மொட்டை அடித்து நூதன முறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பி. அய்யாக்கண்ணு கூறுகையில், “மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எங்களை செயல்பேசி மூலம் தொடர்பு கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறும், கோரிக்கைகள் குறித்து 20.03.2017 அன்று பேச வருமாறும் கேட்டுக் கொண்டார். அமைச்சரின் அறிவுரைப்படி 20.03.2017 அன்று அவரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவு செய்வோம். கடந்த வருடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்களுக்கு உதவுவதாக வாக்களித்தாகவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்து விட்டதாகவும் ஆனால் யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிக்கின்றனர்’, என்றார்.

தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கோரிக்கையை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பொன் ரா பேச்சுவார்த்தை :

மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து துறையில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் விவசாயிகளை நேரில் சந்தித்து தெரிவித்திருந்தார். ராதாகிருஷ்ணனும் தாம் அளித்த உறுதியின்படி மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்குடன் இன்று மதியம் விவசாயிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளை அறிவுறுத்தும்படி தெரிவித்துள்ளார். மேலும், வறட்சி நிவாரணம் தொடர்பாக உயர்மட்டக் குழுவை கூட்டவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மார்ச் 23ல் உயர்நிலை கூட்டம் கூடு இருக்கின்றது. இதற்கிடையே போராட்டம் நடத்திய விவசாயிகளை, இன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, மத்திய அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக விலக்கிக்கொண்டனர். அதே நேரம், மத்திய அமைச்சர்களை சந்திக்கும் வரை டில்லியில் தங்கியிருக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதிமுக எம்பிக்கள் குழு விவசாயிகளை சந்திப்பு :

இதனிடையே, நேற்று முன்தினம் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் குழு விவசாயிகளை சந்தித்தது. இதில், அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து, மத்திய நிதித்துறை அருண்ஜேட்லி மற்றும் மத்திய நீர்பாசனத்துறையின் உமாபாரதி ஆகிய இரு அமைச்சர்களுடன் விவசாயிகள் சந்திப்பு நடைபெற்றது. இதற்கு, அதிமுக எம்பிக்கள் ஏற்பாடு செய்திருந்ததனர்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் தீவிர தாக்கத்தினால், மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதியை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக தெரிகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: