தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

லோகப்பிரியா ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக 360 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்றவர். தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்க உள்ளார்.

பட்டுக்கோட்டை கழிப்பிடம் ஒன்றில் பராமரிப்பு வேலை பார்க்கும் தாயின் மகள் இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

லோகப்பிரியாவின் பயணத்தைப் பற்றி :

`நான் ஆறாவது படிக்கிறப்ப பக்கத்து வீட்டு அக்காவோட ஜிம்முக்குப் போனேன். அங்க பாக்ஸிங்குக்கு பயிற்சி எடுக்க சாதரணமாக வெயிட் லிஃப்ட் செஞ்சேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு மன உறுதியும், உடல் உறுதியும் அதிகம். நான் அதிக வெயிட் தூக்கியதை ரவிச்சந்திரன் சார் பாத்தார். அவர்தான் என்னோட பயிற்சியாளர். அந்த ஜிம்மோட ஓனரும் அவர்தான். என் திறமையைப் பார்த்து வலு தூக்கும் போட்டிக்கு முறையான பயிற்சி கொடுத்தார். அதுதான் என்னோட ஆரம்பப் புள்ளி. அதுக்கப்புறம் நான் நிறைய போட்டியில கலந்துகிட்டு 100-க்கும் அதிகமான மெடல்களைச் ஜெயிச்சேன்.

ஆந்திராவில் நடந்த வலுதூக்கும் போட்டிக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் 25,000 ரூபாய் கொடுத்தாங்க. அதில் வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதல்வரைச் சந்திச்சோம். பாராட்டு தெரிவிச்சிட்டு, உதவுவதா சொல்லியிருக்கார். தென்னாப்பிரிக்கா போறதுக்காக கில்பர்ட் அண்ணா மூலமாக மதுரை, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. நான் காதர் மொகைதீன் காலேஜ்ல B.B.A படிச்சிக்கிட்டு இருக்கேன். அவங்க எனக்கு பர்ஸ்ட் இயர் காலேஜ் ஃபீஸ் அவர்களே கட்டிட்டாங்க. அது மட்டுமல்லாம தென்னாப்பிரிக்கா போக 50,000 ரூபாயும் கொடுத்தாங்க” என்கிறார்.

பெரும் சாதனையாளர்கள் பலரும் தன்னம்பிக்கையாலும் திறமையாலும் வறுமையை விரட்டி சாதித்தவர்கள். அந்தப் பட்டியலில் லோகப்பிரியாவின் பெயரும் அழுத்தமாகப் பொறிக்கப்படும்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி!... மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி! மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்க...
காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சா... காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்! நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து...
ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ்... ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக-கேர...
டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் R... டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் 'பதக்க மங்கை'! தடகளத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் ...
Tags: