காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவுத் திட்டத்தில், `ஆணையம்’ என மாற்றியமைத்து, மத்திய அரசு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு, நீண்ட நாள்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், முன்னதாக வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது. ஆனால், கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி வரைவுத் திட்டம் தாக்கல் செய்வதை மத்திய அரசு தொடர்ந்து ஒத்தி வைத்தது.
பிறகு, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து, கடந்த மே 14-ம் தேதி, மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங் வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பிரதமர், கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளதால், வரைவுத் திட்டத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதல் வாங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, கர்நாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசம் வேண்டும் எனக் கோரியிருந்தது. கர்நாடகத் தேர்தல் மற்றும் அதன் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், நேற்று காவிரி வரைவுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இறுதித் திட்ட அறிக்கையை இன்று 17-5-18 தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இன்று காலை, மத்திய அரசு சார்பில் இறுதிக்கட்ட வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட திட்டத்தில் இருந்த, ‘காவிரி அமைப்பு’ என்ற பெயர், ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்தன. இனி எந்த வாதமும் ஏற்கப்பட மாட்டாது எனத் தெரிவித்து, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும். அது தவறினால், வரும் மே 22-ம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.