22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!

22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!

22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்!

ஆசிய தடகளத்தின், 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டுள்ளார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 800 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில், பந்தய துாரத்தை 14 நிமிடம், 54.48 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்த தமிழக வீரர் லட்சுமணன், தங்கம் வென்றார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


முதல் வீரர்:

இதையடுத்து கடந்த 1983க்குப் பின், உலக தடகள சாம்பியன்ஷிப் 5000 மீ., போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். கடந்த 2015ல் உகானில் நடந்த ஆசிய தடகளத்தில், இப்பிரிவில் வெண்கலம், 10,000 மீ.,ல் வெள்ளி வென்ற, லட்சுமணன் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக உள்ளார். புதுக்கோட்டையை சொக்கூரணியை சேர்ந்தவர் இவர், கோவிந்தன், ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகன். இரு அண்ணன்கள் உள்ளனர். சிறு வயதில் தந்தையை இழக்க, தாய் ஜெயலட்சுமி தான் மகன்களை வளர்த்துள்ளார். இருப்பினும், ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற கனவில் இருந்த லட்சுமணன், 17 வயதில் இங்குள்ள நெடுஞ்சாலைகளில், வெறும் காலில் ஓடி பயிற்சி செய்தார். சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும், கண்டு கொள்ள மாட்டாராம்.

இம்முறை தங்கம் வென்ற உற்சாகத்தில் உள்ள லட்சுமணன் கூறியது :

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற இந்த நாள் மறக்க முடியாதது. இதற்காக கடந்த நவம்பர் மாதம் முதல் தயாராகி வந்தேன். சக ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஊட்டியில் தங்கி கடினமாக பயிற்சியில் ஈடுபட்டேன். இங்குள்ள ஈரப்பதமான சூழ்நிலை காரணமாக சில நேரங்களில் மதிய வேளையில் பயிற்சிகள் செய்து வந்தேன். இந்த பயிற்சி தான், புவனேஸ்வரில் கடைசி நேரத்தில் மற்ற வீரர்களை முந்தி முன்னிலை பெற கை கொடுத்தது. லண்டனில் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் சிறப்பாக செயல்படுவதே அடுத்த லட்சியம். இவ்வாறு லட்சுமணன் கூறினார்.

விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு :

லட்சுமணனின் விளையாட்டு ஆர்வத்தை புரிந்து கொண்ட, புதுக்கோட்டை கவிநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் லோகநாதன், லட்சுமணனை, தங்களது கிளப்பில் சேர்த்து, தடகள பயிற்சி அளித்தார். சிறந்த தடகள வீரராக பயிற்சி பெற்ற லட்சமணன், இந்திய அளவிலும், மாநில அளவிலும், பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2010ல், விளையாட்டு ஒதுக்கீட்டில், லட்சுமணன், இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தொடர்ந்து கடும் பயிற்சிகள் மேற்கொண்ட அவர், தேசிய அளவில் பல வெற்றிகளை பெற்று, இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது, ஒடிசாவில் நடந்து வரும் ஆசிய தடகள போட்டியில், இந்தியாவின் சார்பில், லட்சுமணன், 5,000 மீட்டர் தடகள போட்டியில், தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனால், அவரது தாயார் ஜெயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பயிற்சி அளித்த லோகநாதன், லட்சுமணணின் வெற்றி, அவரது விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு என, தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: