கால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!

கால்நடை இன பாதுகாவலர் விருது - தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!

கால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு!

அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பேணிக் காக்கும் இருவருக்கு, தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தேசிய விலங்கின மரபு வள வாரியம், தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம், சேவா சமூக தொண்டு நிறுவனம் சார்பில், ஆண்டு தோறும், ‘கால்நடை இனப் பாதுகாவலர்’ விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு, தேசிய அளவில், பாரம்பரிய நாட்டு இன கால்நடைகளை பராமரித்து வளர்த்து வரும், 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்தந்த மாநில கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் மூலம், விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவர். அதன்படி, ஈரோடு மாவட்டம், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் சார்பில், நான்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். அதில், மலை எருமை இனமான, பர்கூர் எருமைகளை வளர்த்து வரும், பர்கூரைச் சேர்ந்த மாதையன், 75; ஆலம்பாடி இன மாடுகளை வளர்த்து வரும், மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த சிவன்னதம்பிடி, 65, ஆகியோர் விருதை பெற்றனர். தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, 25 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர், ஹரியானா மாநிலத்தில் நடந்த விழாவில் விருது பெற்றது குறிபிடத்தக்கது. இது குறித்து, பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலைய தலைவர், இவ்வாறு கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: