தமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகப்படுகிறது!

abducted_tamil_landsதமிழர் பேரினம் மீண்டும் ஒரு சுதந்திர போரை துவங்க வேண்டிய காலச்சூழல் உருவாகி உள்ளதாகவே தெரிகிறது.

தமிழர் நாட்டின் தற்போதைய நதி நீர்ப்பிரச்சனை, தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளிட்ட சிக்கலுக்கு முதன்மை காரணம் தமிழர்களின் பரந்த மனப்பான்மையும், அன்றைய தமிழக அரசியல் தலைவர்களின் இந்திய தேசிய பித்தமும், தமிழ் இளைஞர்களிடம் போராட்ட குணமில்லாத தன்னல மனப்பான்மையுமே காரணமாக ஏற்பட்டிருக்கிறது.

1957 ஆம் ஆண்டு நடந்த மொழி மாநில பிரிவினையின் போது தமிழர்களின் பூர்வீக பகுதிகளையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் அண்டை கன்னடர், தெலுங்கர், மலையாளிகளிடம் ஏமாந்து விட்டுக் கொடுத்த விட்டு இன்று அவர்களிடத்திலே கையேந்தும் ஏமாளித்தனத்தை என்னவென்று சொல்வது?

நாம் விட்ட இடத்தின் மூலத்தை அறியாமல் இருப்பது நமது அறியாமையே, முதன்மையான காரணத்தை இனிமேலாவது உணர்ந்து கொண்டு நாம் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க வழி செய்வோம்.

– பாலமுருகன்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: