கடந்த நான்கு நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த 849 மீனவர்கள் புயலில் சிக்கி, படகுகள் காற்றோடு அடித்துக் கொண்டு கடலில் திசைமாறி போனதில், அவர்களின் படகுகள் மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், தேவகட் கோட்டை கடற்கறை பகுதியில் உள்ள இடத்தில் கரை ஒதுங்கியுள்ளது. இவர்களுடன் புயலில் சிக்கி கரையொதுங்கிய கேரளா மீனவர்கள் 51 பேரும் இங்கே தங்கியுள்ளனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இது குறித்து மகாராஷ்டிர அரசும், சிந்துதுர்க் மாவட்ட நிர்வாகமும் கேரளா மற்றும் தமிழக உள்துறை செயலருக்கு செய்தி அனுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து கேரள முதல்வரின் ஏற்பாட்டின் பேரில் அங்கு சென்றுள்ள அதிகாரிகள் கேரள மீனவர்கள் 51 பேருக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுத்தவர்கள், அவர்களின் படகுகளை சாலை வழியாக மீண்டும் கேரளா கொண்டு செல்ல அணைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
ஆனால், தமிழக மீனவர்களை காண இதுவரை யாரும் வரவில்லை. அதைவிடவும் கொடுமை, கடலுக்குள் மீன்பிடிக்க போய் காணாமல் போனவர்களின் வீடுகளுக்கு நீங்கள் உயிருடன் இருப்பது குறித்து செய்தியை கூறியுள்ளோம் என்பதை தெரிவிக்க கூட தமிழக அதிகாரிகள் யாரும் இங்கே வரவில்லை.
இங்குள்ள தமிழக மீனவர்களை அழைத்துக் கொண்டு போக தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்பது குறித்தும் இங்கே முறையான செய்திகள் வரவில்லை.
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் பிரசாந்த் துமீன் என்பவர் எடுத்துள்ள சில படங்களை வெளியிட்டு, இந்த படத்தில் உள்ளவர்கள் எங்களுடைய பகுதியில் பாதுகாப்பாக உள்ளார்கள். அவர்கள் குடும்பத்தினரிடம் பேச ஆவலுடன் உள்ளனர். எங்களின் மொபைல் போன்கள் மூலம் தொடர்பு கொண்டபோதிலும், அவர்களின் ஊரில் உள்ள செல்போன்கள் வேலை செய்யவில்லை. புயல் காரணமாக அங்குள்ள செல்போன் கோபுரங்கள் சாய்ந்து போயிருக்கும் என்று ஆறுதல் சொல்லி அவர்களை நாங்கள் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம் என்றவர், மேலே உள்ள படங்களில் உங்களுக்கு அடையாளம் தெரிந்தவர்கள் இருந்தால், அவருடைய குடும்பத்தினரிடம் தகவல் சொல்லுங்கள். மேலும் இவர்களை பற்றிய விபரங்களுக்கு என்னுடைய என்னை தொடர்பு கொள்ளுங்கள். மேற்கொண்டு உங்கள் மாநில அரசை உடனடியாக நடவடிக்கை எடுத்து, இங்கே ஒரு அறையில் போதிய உடுப்புகள், படுக்கை வசதிகள் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ள 849 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்டுக் கொண்டு போக ஏற்பாடு செய்யுங்கள்… என்று கேட்டு கொண்டுள்ளார்.