யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை செயல்பட்டு வந்த நடராஜன் சில நாட்களுக்கு முன் பணி முடிந்து இந்தியா திரும்புகிறார். புதிய துணைத்தூதுவர் பொறுப்பிற்கு ஆந்திராவை சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் துணைத்தூதுவராக பதவி வகிக்கும் முன் சீனாவின் ஷங்காய் மாநிலத்தின் இராஜதந்திர அதிகாரியாக பணியாற்றினார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இவர் ஒரு தெலுங்கர் ஆவார். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் அமைந்த பின் மூன்று துணைத் தூதுவர்கள் இதுவரை பணியாற்றினர். அவர்கள் அனைவரும் (மகாலிங்கம், மூர்த்தி, நடராஜன்) தமிழர்கள் ஆவார்கள்.
ஆனால் முதல் முறையாக தமிழர் அல்லாத ஒரு தெலுங்கரை யாழ்ப்பாண துணைத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ்.பாலச்சந்திரன் தெலுங்கராக இருந்தாலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.