தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு செல்வோம்!

தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு செல்வோம்!

இசை ஒரு மாபெருங் கடல். அதைக் கேட்க, சுவைக்க, இசைக்க விழைந்தோர் அதன் இனிமையிலும், ஆழத்திலும் தன்னை இழந்ததுண்டு. இசையில் மிகுந்த அகலமும், ஆழமும் உடை யது செவ்வியல் இசை. அத்தகைய ஓர் இசை மரபுக்கு உரிமை உடைய வர்கள் தமிழர்கள்.

தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் 1907-ல் ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற இசைத்தமிழ் ஆய்வு நூலை வெளியிட்டார். தொடர்ந்து, 1917-ல் ‘கருணாமிர்த சாகரம்’ நூலை வெளியிட்டார். இச்சூழலில் மேலைநாட்டுக் கல்வியும், ஆங் கிலப் புலமையும், அறிவியல் அறிவும் கொண்ட விபுலாநந்த அடிகளாருக்கு இசைத் தமிழிலும் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. தொடக்க நிலையில், தமிழ் இலக்கிய ஆய் வில் ஈடுபாடு கொண்டிருந்த அடிக ளார், பின்னர் தமிழ் இசைக்கே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

தமிழரின் தொல் இசை வரலாற் றையும், தமிழ், இசையின் தனித் தன்மையையும் நுட்பமாக எழுதி யுள்ள நூலுக்கு விபுலாநந்த அடிக ளார் ‘யாழ் நூல்’ எனும் பெயரிட்டது மிகவும் பொருத்தமாகும்.

பொதுவாக இசையைத் தோற்று விக்கும் கருவிகளில் தமிழர் முதலில் அறிமுகப்படுத்திய நரம்புக் கரு வியையே யாழ் என்பர். மேலும், நரம்புக் கருவிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த கருவி யும் யாழே. தமிழ் இசைக் கடலில் யாழின் துணைக்கொண்டு, தமிழ் இசையின் தொன்மை, தனித் தன்மை, ஆழம் மற்றும் அதன் வீச்சை அளக்கும் முயற்சியே விபுலாநந்த அடிகளார் இயற்றிய யாழ் நூல்.

தமிழரின் கவின்கலையாகிய இசையின் சிறப்பை அறிய விழைவோர்க்கும், தமிழ் இசையை கற்க விரும்புவோருக்கும், ஆய்வு செய்ய முயல்வோருக்கும் இது சிறந்த ஆவணமாக அமைந்துள் ளது. பழந்தமிழரின் இசை நுட்பங்கள்; இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகளையும் எடுத்து இயம்புகிறது யாழ் நூல்.

யாழ் நூலை 7 இயல்களாக அடிகளார் அமைத்துள்ளார். முதல் இயல் பாயிரவியல். இதில் ஏழி சையை உழை, இளி, விளரி, தாரம், குரல்; துத்தம், கைக்கிளை என்று வகைப்படுத்தியுள்ளார். இதற்கு இறைவணக்கம் பாடலில் ‘மேலது உழைஇளி, கீழது கைக்கிளை’ என்று இளங்கோவடிகள் கூறிய வரிக்கேற்ப ஏழிசையாய் தொடங்கு வதாக அடிகளார் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக, இசை நரம்புகளின் பெயரும், முறையும் கூறி, குறியீடு கள் (Notation) வரும் முறைக்கு ஓர் அட்டவணையை கொடுக்கிறார்.

2-வது இயல், யாழ் உறுப்பியல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வில் யாழ், பேரி யாழ், சீறி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என 7 வகை யாழ்கள் பற்றியும், அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்தும் கூறப்பட்டுள் ளது. யாழின் உறுப்புகளான, பத்தர், கோடு, உறுவாய், போர்வை, தோல், யாப்பு, உந்தி, மாடகம், கவைக் கோடு என்பவைக் குறித்தும், இவற்றின் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல நாட்டு யாழ், அவற்றின் வடிவங்கள் பற்றியும் சான்றுகளுடன் ஒப்பிட்டு விளக்குகிறார்.

3-வது இயலில், யாழ் கருவியி யலை, வன்பொருள் (Hardware) என்றும் இசை நரம்பியலை மென் பொருள் என்றும் குறிப்பிடுவது பொருத்தம் உடையது என்கிறார்.

4-வது இயல் பாலை திரிபியல். இதில், பன்னிரு பாலைகள், கிரமம், ஏழ்பெரும் பாலைகளை மூன்று கிரமங்களில் நிறுத்தல், துத்த கிரமம் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார். சகோட யாழ் கருவிக்கு இசை கூட்டும் முறையை கூறுகிறார்.

5-வது இயல் பண்ணியல். இதில், பண் வளர்ச்சி, திணைப் பண்க ளின் பாலை நிலை, நரம்படைவு பற்றி பழந்தமிழ் இலக்கியங்களின் துணையுடன் இசை தொடர்பான ஆய்வாக அமைத்துள்ளார்.

6-வது தேவாரவியல். இன்றைய கீர்த்தனைகளுக்கு முன்னோடி யான இசை தேவார திருவாசகங் களும், ஆழ்வார்களின் பாசுரங் களுமே என்று எடுத்துரைக்கிறார். இவ்வியலில், தமிழ் இசையை மிக சிறப்பாக, துல்லியமாக, எளிமை யாக விவரிக்கிறார் அடிகளார்.

7-வது இயலான ஒழிபியலில், சிறப்பாக எண்ணலளவை, இசைக் கணிதம் கொண்டு அலகு கணக்கி டல், பண்பெயர்ப்பு ஆகியவற்றை அறிவியல் முறையில் விளக்கி கூறியுள்ளார்.

விபுலாநந்தரின் யாழ் நூல், தமிழர் மறுமலர்ச்சி காலத்தில் உருவாகிய அரிய இசை ஆய்வு நூல்களில் ஒன்று. நெடுங்காலமா கவே தமிழ் இயல், இசை ஆர்வலர் களிடம் யாழ் ஹார்ப் (Harp) போன் றதா, லூட் (Lute) போன்றதா என்ற ஐயம் தோன்றியதுண்டு. ஆபிரகாம் பண்டிதர் சிலவகை யாழ் கருவிகள், ‘ஆர்ப்’ போன்றதும், வேறு சில ‘லூட்’ போன்றதும் என்ற ஆய்வு முடிவுக்கு வருகிறார்.

விபுலாநந்த அடிகளார் சித்தரிக் கும் நால்வகை யாழ் கருவிகளும் ‘ஹார்ப்’ போன்றதே என்கிறார். பாணர் கைவழி எழுதிய வரகுண பாண்டியர் யாழ் ‘லூட்’ போன்ற கருவியே என்கிறார். இது, மேலும் ஆய்வுக்குரியதே.

அடிகளாரின் யாழ் நூலின் ஒவ் வொரு இயலிலும் பற்பல ஆய்வுக் களங்கள் உள்ளன. ஆர்வமும், இயல், இசை யாப்பிலக்கண முழு அறிவும் உள்ள தக்கார் தலைமை யில் இந்த ஆய்வுக் களங்களை அணுக வேண்டும்.

பிரபல மேலைநாட்டு பல்கலைக் கழங்களில் இன மரபு இசை யியல் (Ethno Musicology Music) என்பது தனித் துறையாக விளங்குவதை அறிவோம்.

தமிழ் கூறும் நல்லுலகம் இந்த இரு இனமரபு இசையியலாளர் களையும் (Ethno – Musicologists) அவர்கள் தம் நூல்களையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இன மரபு இசையிய லாளர்கள், பல்கலைக்கழகங்கள் அவர் தம் நூல்களுக்கு தக்க இடம் தந்து தமிழ் இசைக்கு உலக அரங் கில் தனி இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன்.

  • தமிழ் இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: