வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டுபிடிப்பு!

வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டுபிடிப்பு!

வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டுபிடிப்பு!

சிப்பாய் புரட்சியின் போது, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி, கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோவிலருகே, மாட்டு தொழுவம் உள்ளது. இங்கு, கோவிலில் சேரும் குப்பையை கொட்ட, கடந்த சில நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நேற்று காலை, தொழிலாளர்கள் பள்ளத்தை தோண்டிய போது, ஒருவித சத்தம் கேட்டுள்ளது. அப்போது, பீரங்கியின் முன்பகுதி இருந்தது தெரியவந்தது. வேலூர் கோட்டை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் சோதனை செய்ததில், 1796ம் ஆண்டு, சிப்பாய் புரட்சியின் போது, ஆங்கிலேய படைகள் பயன்படுத்திய பீரங்கி என்பது தெரியவந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


வேலூர் தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலர் ஈஸ்வரன் கூறுகையில், ”பீரங்கியை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர, சென்னையில் இருந்து வரும், 28ல், ஒரு குழுவினர் வருகின்றனர்,” என்றார். ‘ஆங்கிலேயர் காலத்தில், ஜலகண்டேஸ்வரர் கோவிலை ஆயுதக் கிடங்காக பயன்படுத்தி, நிறைய போர்க்கருவிகள் வைத்திருந்தனர். முழுமையாக ஆய்வு செய்தால், நிறைய பீரங்கி குண்டுகள் கிடைக்கும். அவை, இப்போதும் வெடிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பாக வெளியே எடுக்க வேண்டும்’ என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: