வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் - அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினத்தை முன்னிட்டு வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் அவரது உருவப் படத்திற்கு அரசு சார்பில் டி.ஆர் ஓ வீரப்பன் மலர் தூவி மரியாதை செய்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது மணியாச்சி கிராமம். இங்கு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ரயில்வே ஜங்சன் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் கடந்த 1911ம் ஆண்டு ஜூன் 17ந்தேதி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ்துரை, குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஜங்சனில் ரயில் நின்ற போது, வாஞ்சிநாதன், கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று, தன்னுடைய உயிரையும் மாய்த்துக்கொண்டார். அதிலிருந்து மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சிநாதனின் பெயரும் சேர்க்கப்பட்டு, “வாஞ்சி மணியாச்சி” என அழைக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழக அரசு சார்பில் வாஞ்சிமணியாச்சி ரயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாஞ்சிநாதன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன்தேவசகயாம் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். இதேப் போன்று சமூக ஆர்வலர்களும் மலர் துவி மரியாதை செய்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: