இராமேஸ்வரம் கோவில் பற்றிய இதுவரை அறியாத தகவல்கள் கடந்த கால சரித்திரம்…

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் பூஜை செய்து வந்த பிராமண சமூகத்தின்  மக்கள் இராமேசுவரம் தீவிற்கு வந்த வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறையும், 
அவர்கள் எந்த மாநிலம்? எந்த சமூகம்?  யாரைச் சார்ந்தவர்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்…
 
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவனடியார்கள் என்ற ஆண்டிப்பண்டாரம் வம்சத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் செய்து வந்தனர். 
 
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் படை எடுத்து மீண்டும் இந்தக் கோயிலை தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள்.
 
சத்ரபதி சிவாஜி அவர்கள் மராட்டியத்தை  ஆண்டு கொண்டிருக்கும் பொழுது மராட்டியதிற்கு தெற்கே உள்ள பகுதிகளையும், கிழக்கே உள்ள பகுதிகளையும் போரினால் கைப்பற்றி ஆண்டு வந்தார்கள்… மராட்டிய அரசனான சிவாஜி அவர்கள் போரில் மிகவும் வல்லவராகவும், வீரனாகவும் இருந்ததால் எங்கு சென்றாலும் வெற்றியைத் தவிர தோல்வி இல்லாத மன்னராக இருந்தார்.
 
மராட்டியத்தில் இருந்து தெற்கு நோக்கி படையெடுத்து வந்த சத்ரபதி சிவாஜி அவர்கள் வரும் வழிகளில் உள்ள சிற்றரசு மற்றும் பேரரசுகள் என அனைவரையும் வென்று தஞ்சாவூர் வந்து தஞ்சாவூர் அரண்மனையை தன் வசமாக்கிக் கொண்டு இந்தியாவினுடைய தெற்குப் பகுதியை ஆண்டு வந்தார்…
 
சத்ரபதி சிவாஜி அவர்களுக்கு ஐந்து போர் தளபதிகள் இருந்தார்கள். 
 
தஞ்சாவூரை வென்ற பிறகு அந்த ஐந்து தளபதிகளையும் அழைத்து 
#போஸ்லே 
என்ற தளபதியை தமிழ்நாட்டிற்கு பொறுப்பாகவும்…
 
#பேஸ்வனாக்கள் 
என்ற தளபதியை மகாராஷ்டிராவிற்கும்..
 
#சிந்தியா 
என்ற தளபதியை மத்தியப் பிரதேசத்திற்கும்.. 
 
#கெயிக்வாட்
என்ற தளபதியினை குஜராத் பகுதிக்கும், மற்றுமொரு தளபதியை வேறு ஒரு  இடத்திற்கும்…
அந்தந்த பகுதியில் உள்ள தன் நிர்வாகத்தை,
தன் வசப்படுத்தி உள்ள இடங்களில்  பொறுப்பை ஏற்கும்படி அனுப்பினார்.
 
அப்படி அனுப்பப்பட்ட தளபதிகளில் கெயிக்வாட் என்பவர் மன்னர் சத்ரபதி சிவாஜி உடைய வம்சத்தைச் சார்ந்தவர் ஆவார். 
 
நம்முடைய சினிமா நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.
ரஜினிகாந்த் என சினிமாவுக்காக டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் வைத்த பெயர் ஆகும் இவரின் இயற்பெயர்  “சிவாஜி ராவ் கெய்க்வாட்” ஆகும்
ரஜினிகாந்த் அவர்கள் இந்த வம்சத்தை சேர்ந்தவர்…
 
மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட தளபதிகளில் ஒருவரான சிந்தியா அவர்கள் வம்சாவளியில் வந்தவர்கள் தான் குவாலியர் மகாராணியும். 
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா அவர்களும் ஆவார்கள்…
 
இந்த நேரத்திலே உஜ்ஜயினி இந்தூர் பகுதிகளை ஆட்சி செய்த ராணி அகல்யாபாய் தேவி அவர்கள்  தஞ்சாவூர் வந்திருந்தார்கள். 
 
அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
 
அப்போது அந்த காலக்கட்டங்களில் இராமேஸ்வரம் கோயிலுக்கு சரியான புரோகிதர்கள் இல்லை என்ற காரணத்தால் மகாராஷ்ட்ராவில் இருந்து  சத்ரபதி சிவாஜி வம்சத்தைச் சேர்ந்த 
40 பிராமணர் குருக்களின் குடும்பத்தினரையும் கூடவே கூட்டி வந்திருந்தார்கள்…
 
இராமேஸ்வரம் வந்து சேர்ந்தவுடன் 
அந்த நாற்பது மகாராஷ்டிரா பிராமணர் குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் மன்னர் சேதுபதி அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்து அன்று முதல் கோவில் பூஜைகள் அனைத்தையும் செய்து வர கேட்டுக்கொண்டார்கள். 
 
அன்று முதல்  இவர்கள் தான் அந்த கோயில் பூஜைகள் அனைத்தையும் செய்து வந்தார்கள். 
அதன் பின் இவர்களுடன் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் பேசக்கூடிய பிராமண      குருக்களும் இணைந்து கொண்டார்கள்.
 
ராணி அகல்யா பாய் தேவி இராமேஸ்வரம் வந்ததன் நினைவாக இராமேஸ்வரம் சன்னதி தெருவில் ராணி அகல்யா பாய் தேவி பெயரில் ஒரு சத்திரத்தை கட்டி வைத்தார்கள். 
 
இராமேஸ்வரத்தில் முதல் முதல் சினிமா படப்பிடிப்பு இந்தச் சத்திரதின் முன்னால் தான் நடத்தப்பட்டது. அன்னை என்ற பெயரிலே எடுக்கப்பட்ட அந்த சினிமா படப்பிடிப்பில் நடிகை பானுமதி அவர்கள் நடித்தார்கள். கதையில் இராமேஸ்வரம் கோயிலுக்கு வந்ததாகவும் வந்தவுடனேயே உறவினர் இறந்து விட்டதாக தந்தி கிடைத்து, அகல்யா பாய் சத்திரத்திற்கு தங்குவதற்கு வந்த அவர்கள் உடனே திரும்பிப் போவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
 
இராமேஸ்வரம் கோயிலுக்கு உள்ளே உள்ள சாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் நடக்கும் பூஜைகளை மகராஷ்ராவிலிருந்து வந்த பிராமணர் குருக்களே நடத்தி வந்தார்கள்…
 
குறிப்பாக அம்மன் சன்னதியில் உள்ள சக்கரத்தை பூஜை செய்வது மகாராஷ்டிர பிராமணர்கள் குருக்கள் அவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த மகாராஷ்டிர பிராமணர்  குடும்பத்தினருக்கு உணவிற்காக  அரிசி,பருப்பு,நவதானியங்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தில் இருந்து கொடுக்கப்பட்டது. 
 
பால்,மோர்,தயிர்,நெய் போன்ற தேவைகளுக்காக அவர்களுக்கு பசுமாடுகள் வழங்கப்பட்டன. 
 
அந்த பசு மாடுகள் மேய்வதற்காக  ஆரியர் குன்று,நொச்சுவாடி, தீட்சதர் கொல்லை,மெய்யம் புளி போன்ற பகுதிகளில் இவர்களுக்கு நிலங்கள் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டது.
 
ராணி அகல்யா பாய்  தேவி அவர்கள் இராமேஸ்வரம் தீவிற்குள் வரும்போது பாம்பன் துறைமுகத்தில் இருந்து பல்லக்கில் ஏற்றி வரப்படுவார்கள். இராமேஸ்வரத்தில் அப்படிப்பட்ட சிறு பல்லாக்கில் செல்பவராக ஒரே ஒருவர் மட்டும் இந்ததீவில் இருந்தார். அவர்கள் யாரென்றால்  கங்காதர பீதாம்பர தசபுத்திர பண்டா அவர்களுடைய தாயார் ஆவார். 
 
ராணி அம்மையார் அவர்களுடன் சேர்ந்து அவரும் பல்லக்கில் கோயில் அருகே உள்ள அகல்யாபாய்  தேவி சத்திர மண்டபத்திலே தங்கியிருந்து அவர்களை வழியனுப்பி அவர் போகும் வரை கூடவே இருப்பாராம். 
 
கங்காதர பீதாம்பர தஷ புத்திர பண்டா அவர்கள் நிறைய நிலங்களை தானமாக அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கு விலை உயர்ந்த  நிலங்களை கொடுத்து உதவி இருக்கின்றார்.  
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவர்களுடைய குடும்பத்தார்கள் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் யார் வந்தாலும் இவர்கள் குடும்பத்தார் தான் புரோகிதம் செய்வார்கள். 
 
இப்பொழுதும் இவர்களுடைய வாரிசாக 1)ராதாகிருஷ்ணன் பண்டா 
2)ரவி பண்டா 
3)ராஜேந்திர பண்டா  
இவர்கள் இருந்து வருகிறார்கள். தற்சமயம் மகாராஷ்டிராவில் இருந்து வந்திருந்த 40 குடும்பத்தினரில் ஒரு சிலர் தான் இன்றும் இங்கே இருக்கின்றார்கள் மற்றவர்கள் எல்லாம் படிப்பில் உயர்ந்தும் பதவிகளில் உயர்ந்தும் வெளிநாட்டிலும் வட மாநிலங்களிலும் இருக்கின்றார்கள்.
 
தமிழ்நாட்டிலேயே இருக்கின்ற கோயில்களில் தீர்த்தஸ்தலமாக இருப்பது இராமேஸ்வரம் கோயில் ஒன்று தான். இந்தக் கோயிலில் தீர்த்தம் ஆடுவது எப்படி என்பதற்கு ஒரு வழி முறை இருக்கின்றது. 
 
அந்த முறையில் தான் ஆதி காலத்தில் இங்கே வந்த தீர்த்தம் ஆடி வழிபாடுகள் செய்து அனைவரும் கடைபிடித்து வந்துள்ளனர். ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட வழிமுறைகள் கையாளப்படுவது இல்லை.  ஒரு வேளை காலத்தால் அழிந்து தெரியாமல் போய்விட்டது என்று நினைக்கத் தோன்றுகின்றது. 
 
சுருக்கமாக சொன்னால் உப்பூர் பிள்ளையார் கோயிலில் ஆரம்பித்து கோடி தீர்த்தத்தில் முடிவடைய வேண்டும்.
 
இராமேஸ்வரம் கோயில் விசாரணையில் #அலிப்புலி_ராவுத்தர்…
இராமேசுவரம் லட்சுமணத் தீர்த்தம் வழக்கும் விசாரணையும் தீர்ப்பும்!
 
இராமேசுவரத்தில் இராமநாதசாமி கோயிலுக்கு உள்ளும் புறமுமாய் பல தீர்த்தங்கள் இருந்தன!
 
கோயிலிலும் தீர்த்தங்களிலும் பூஜைகள் செய்து பிரசாதம் அளிப்பதற்கு தமிழ்ப் பிராமணர்களும் வடமொழிப் பிராமணர்களும்பணியாற்றினர்!
 
தமிழ்ப் பிராமணர்கள் சபைக்கு குருக்கள்மார் சபை எனப்பெயர்.
 
வடமொழிப் பிராமணர் சபைக்கு ஆரியமகா சபை எனப்பெயர்!
 
தமிழ்ப் பிராமணர்கள் குருக்கள் என அழைக்கப்பட்டார்கள். வடமொழிப் பிராமணர்கள் நைனா என அழைக்கப்பட்டார்கள்.
 
தீர்த்தங்களில் சிறப்பானதாக, சக்தியானதாக லட்சுமணத் தீர்த்தம் திகழ்ந்தது,
 
லட்சுமணத் தீர்த்தத்தில் பூஜை செய்து பிரசாதம் தரும் பிராமணர்களுக்கு
வருமானம் அதிகம் கிடைத்தது!
 
லட்சுமணத் தீர்த்தத்தில் பூஜை செய்யும் உரிமையும் வருமானம் பெறும் உரிமையும்
யாருக்குரியது?
 
குருக்கள்களுக்கும், நைநாக்களுக்கும் மோதல்! இரண்டு சபையோரும் இராமநாதபுரம் அரண்மனை சென்றனர்!  மன்னர் முத்துக் குமார விசைய ரகுநாதரிடம் முறையிட்டனர்!
 
இராமநாத சாமி கோயிலையும் சேது பாலத்தையும், வந்து செல்லும் பக்தர்களையும் பாதுகாப்பதற்காகவே வலுவாய்ந்த போர்க்குடி மறவர்களை நியமித்தார்கள் பாண்டிய வேந்தர்கள். அந்தப் போர்க்குடி மறவர்களின் வாரிசுகளே சேதுபதி மன்னர்கள் ஆனார்கள்!
 
கோயில் சேதுபதி மன்னர் பாதுகாப்பில் தான் இருக்கிறது ஆனாலும் இந்த வழக்கை அவர் விசாரிக்கவில்லை!
 
விசாரணைக் குழு ஒன்றை மன்னர் நியமித்தார்! அந்தக் குழுவின் உறுப்பினர்களாக (நடுவர்களாக)
1 புரோகிதம் சின்னய்யன்
2 உப்பூர் வேதமய்யன் 
3 தேவி பட்டணம் வெங்கிட்டய்யன்
4 ராமேஸ்வரம் திம்மானாச்சாரி
5 தனுக்கோடி காமாட்சியய்யன்
6 ஏத்துவாரி சேசய்யன்
7 கவிராயர் சுப்பிரமணியன்
8 கடற்துறை ராமநாதப் பிள்ளை
9 உப்பளக் கணக்கு இருளப்ப
பிள்ளை 
10 அட்டவணை சுப்பிரமணியப்பிள்ளை 11 கவரை சங்கரன் செட்டியார்
12 திருமலை செட்டியார் 
13 வயிரவன் செட்டியார் 
14 சூரியநாராயணன் செட்டியார் 
15 பங்காரு செட்டியார் 
16 கோமுட்டி ராமு செட்டி 
17 அலிப்புலி ராவுத்தர்
18 உத்தமப் பணிக்கன் 
19 மயிலேறி நாடான் 
ஆகியோர் பங்கேற்கிறார்கள்.  இவர்களில் யாரும் அரசுப் பணியாளர் இல்லை!
 
இந்த வழக்காடு மன்றத்தின் பார்வையாளர்களாக அரசு அதிகாரிகளான 
1.தளகர்த்தா ரா.வெள்ளையன் சேர்வை, 
2.ராஜ பிரதானி ஆண்டியப்ப பிள்ளை, 3.பெரியகட்டளை ராமநாதப் பண்டாரம், 4.சத்திரம் மணியக்காரர்  ஆகிய நால்வரும் இருந்தனர்!
 
இராமநாதபுரம் கோட்டைவாசல் பிள்ளையார் கோயில் சந்நிதியில் 18-01-1746 இல் இவ்வழக்கின் விசாரணையும் தீர்ப்பு வழங்கலும் நடந்தன!
 
இரு தரப்பினரிடமும் பெற்ற வாய்மொழி விளக்கங்கள்,  சுவடி ஆவணங்கள், 1430 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு வழக்கின் விசாரணையும் தீர்ப்பும் அடங்கிய ஒரு செப்பேடு மற்றும் பல ஆவணங்களும் சான்றுகளாக ஏற்கப்பட்டன!
 
நிறைவாக “லட்சுமண தீர்த்தத்தின் அர்ச்சனை பூசை உரிமைகளும் கிடைக்கும் ஆதாயங்களும் தமிழ்ப் பிராமணர்களுக்கே! ” எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தீர்ப்பின் முழு விபரமும் முத்தரி துப்பிள்ளை மகன் ராமலிங்கத்தால் ஏட்டில் எழுதப்பட்டு,  அதைப் பார்த்து ஈசுவரமூர்த்தி ஆசாரி மகன் குழந்தைவேல் செப்பேட்டில் பொறித்திருக்கிறார்!
 
அரசர், அமைச்சர், நாட்டாண்மை ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்காமல் சாதி,மதம் வேறுபாடின்றி பொது மக்கள் மட்டுமே பங்கேற்ற நடுவர் மன்றம் அமைத்து தீர்ப்பு கண்டிருப்பது மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு!

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: