தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தேக்கம்பட்டியில் பழமை வாய்ந்த காட்டுக் கோயில்களின் நடுகல் கண்டுபிடிப்பு!

தர்மபுரி அருகே பழமையான காட்டுக்கோயில்களின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி தோக்கம்பட்டியில் பெருமாள்கோயில் மேடு உள்ளது. இங்கு வயல்வெளிகள் நடுவில், குருமன்ஸ் இனமக்களின் காட்டுக்கோயில் இருப்பதை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர், அவரது ஆய்வு மாணவர்கள் சிவக்குமார், மதன்குமார் மற்றும் குழுக்கள் ஆய்வின் போது கண்டறிந்தனர். குருமன்ஸ் இன பழங்குடி மக்கள், ஆடு மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பெருங்கற்காலத்தில், இன்றைய கர்நாடகப்பகுதி, அன்றைய தமிழகத்தின் குடகுப்பகுதியில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் குடிப்பெயர்ந்தனர். அப்போது வளமுள்ள பகுதிகளில் தங்களின் ஆடுகளுடன் சிறிதுகாலம் தங்கினார்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அங்கு தங்களின் கோயில்களை அமைத்தார்கள். அது கற்களால் ஒரு அறை அளவிற்கு கல்லுக்கட்டை உருவாக்கி அதனுள் ப வடிவில் ஓடுகற்களை நட்டு வழிபட்டனர். அக்காலத்தில் காடுகளாக அப்பகுதிகள் விளங்கியதால் அவை காட்டுக்கோயில்கள் என அழைக்கப்பட்டன. இக்கோயிலில் உள்ள நடுகற்களில் சமூக, கலாச்சாரப் பழக்க வழக்கங்களை செதுக்கி வைத்துள்ளனர். இதில் இதுவரை 30க்கும் மேற்பட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயில் மற்ற காட்டுக்கோயிலில் இருந்து மாறுபட்டுள்ளது. குருமன்ஸ் இன பழங்குடி மக்களிடையே 70க்கும் மேற்பட்ட குலங்கள் (பிரிவு) காணப்படுகிறது. ஒவ்வொரு குலத்தவரும் தங்களுக்கென தனிப்பட்ட காட்டுக்கோயில்களை கொண்டுள்ளனர்.

மேலும் பண்டைய காலத்தில் தங்களின் முன்னோர்கள் தங்கியிருந்தபோது அமைக்கப்பட்ட கோயில்கள், தாங்கள் காலப்போக்கில் குடிபெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றாலும், தங்களின் குலதெய்வக் கோயிலாக கருதுகின்றனர். ஒவ்வொரு குலமும் ஒரு கோயிலை கொண்டுள்ளனர். ஆனால், தோக்கம்பட்டியில் பெருமாள்கோயில் மேடு பகுதியில் ஒரே இடத்தில் 5 காட்டுக்கோயில்கள் உள்ளது. புதுமையானது. இதில் ஒரு கோயிலில் மட்டும் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த இந்த இன பழங்குடி மக்கள் வழிபடுகின்றனர். எனவே இப்பகுதி ஒருகாலத்தில் குருமன்ஸ் மக்களின் குடியிருப்பாக இருந்திருக்க வேண்டும்.

சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக்கோயில், வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இதில் ஒரு கோயிலில் உள்ள நடுகற்களில் மட்டும் வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. பிற கோயில்கள் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தாமல் உள்ளது. வழிபாடு நடத்தாமல் உள்ள கோயில்களுக்குள் செல்ல முடியாத அளவுக்கு செடி, கொடிகள் புதர் மண்டி கிடக்கின்றன. அதை சுத்தம் செய்து பராமரிப்பு பணி மேற்கொண்டால் உள்ளே ஏராளமான நடுகற்களும், குருமன்ஸ் இன மக்களின் பண்பாட்டு கூறுகளும், அவர்களை பற்றிய செய்திகளும் வெளியேவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: