இந்தி எதிர்ப்பு போராளி கோவை பீளமேடு தண்டாயுதபாணி !

கோவை பீளமேடு தண்டாயுதபாணி !

கோவை பீளமேடு தண்டாயுதபாணி

பீளமேடு தண்டாயுதபாணி (1944-1965) என்று அறியப்படும் மா. தண்டாயுதபாணி, இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின் போது நஞ்சுண்டு இறந்த போராளி ஆவார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


வாழ்க்கை :

கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூருக்கு அருகில் உள்ள குளத்துப்பாளையம் என்ற ஊரில் மாட்டுச் செக்கு வைத்துத் தொழில் செய்து வந்த மாரியப்பன் செட்டியார், மாரியம்மாள் இணையருக்கு பிறந்தார். இவரது பெற்றோர் மூன்று மகள்களையும், இரண்டு மகன்களையும் பெற்றனர். 1944-இல் பிறந்த இரண்டாவது மகனான தண்டபாணி கல்வியில் ஆர்வமுடன் இருந்ததால், கோவை தேவங்கம் பேட்டையிலும், உக்கடத்திலும் ஆரம்ப பள்ளியும், கோவை கல்லூரியிலேயே புதுமுக வகுப்பும் (பி.யூ.சி) தேர்ச்சி பெற்றார். கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து பயின்று வந்தார். மகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் :

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உச்சக்கட்டமாய் மாணவர்கள் ஊர்வலம் நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டும், வரிசையாகத் தீக்குளித்தும், நஞ்சருந்தி இறந்த செய்திகளும், ஆயிரக்கணக்கானோர் தடியடி, துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கொடுமைகளைப் படித்தும், கேள்விப்பட்டும் அறிந்த தண்டபாணி மனம் வருந்தினார்.

தற்கொலை :

மாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் துப்பாக்கிக் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின. தமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது. தமிழ் அழியக் கூடாது என்பதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்தார். தனது சாவின் காரணத்தைக் கேட்டாவது, தமிழைக் காக்கும் விழிப்புணர்வு ஓங்கும் என்று எண்ணினார். 1965 பிப்ரவரி மாதம், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று எழுதி வைத்து விட்டு நஞ்சுண்டு தன்னறையில் மயங்கிக் கிடந்தார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: