தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்!

தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்!

தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்!

உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.

நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் “ச, ரி, க, ம, ப, த, நி” என்கிற ஏழு இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

இன்றும் நிறைய கோவில்களில் குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் பூ மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும். அப்ப எவ்வளவு துல்லியமாக அளவீடு செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை போல் வந்து விழும்.

வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் மூன்று வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.

ஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளதை பார்க்கலாம். அது உலக அதிசயம்.

யாழி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: