தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசுப்பணியில் 20% முன்னுரிமை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசுப்பணியில் 20% முன்னுரிமை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசுப்பணியில் 20% முன்னுரிமை வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனுவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தனது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாகவும், தற்போதைய தேர்வு நடவடிக்கைகள் அந்த அரசாணைக்கு ஏற்ப இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். தேர்வு நடவடிக்கைகளை ரத்து செய்யவும் அல்லது ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிடவும் அவர் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, மனுதாரரின் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கவும், நாளை நடைபெறவுள்ள விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மனுதாரரை அனுமதிக்கவும் உத்தரவிட்டார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை கண்டிப்புடன் பின்பற்றவும் உத்தரவிட்டார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: