தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப் போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெரு வழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
எண் வடிவங்கள் :
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
பயன்படுத்தும் முறை :
தமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டது. சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.
உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது. அதாவது, இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று (௨-௲-௪-௱-௫-௰-௩) தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .
எண்கள் :
௧ = 1 ௨ = 2 ௩ = 3 ௪ = 4 ௫ = 5 ௬ = 6 ௭ = 7 ௮ = 8 ௯ = 9 ௰ = 10 |
௰௧ = 11 ௰௨ = 12 ௰௩ = 13 ௰௪ = 14 ௰௫ = 15 ௰௬ = 16 ௰௭ = 17 ௰௮ = 18 ௰௯ = 19 ௨௰ = 20 |
௨௰௧ = 21 ௨௰௨ = 22 ௨௰௩ = 23 ௨௰௪ = 24 ௨௰௫ = 25 ௨௰௬ = 26 ௨௰௭ = 27 ௨௰௮ = 28 ௨௰௯ = 29 ௩௰ = 30 |
௩௰௧ = 31 ௩௰௨ = 32 ௩௰௩ = 33 ௩௰௪ = 34 ௩௰௫ = 35 ௩௰௬ = 36 ௩௰௭ = 37 ௩௰௮ = 38 ௩௰௯ = 39 ௪௰ = 40 |
௪௰௧ = 41 ௪௰௨ = 42 ௪௰௩ = 43 ௪௰௪ = 44 ௪௰௫ = 45 ௪௰௬ = 46 ௪௰௭ = 47 ௪௰௮ = 48 ௪௰௯ = 49 ௫௰ = 50 |
௫௰௧ = 51 ௫௰௨ = 52 ௫௰௩ = 53 ௫௰௪ = 54 ௫௰௫ = 55 ௫௰௬ = 56 ௫௰௭ = 57 ௫௰௮ = 58 ௫௰௯ = 59 ௬௰ = 60 |
தமிழ் இலக்கம் | பெயர் | எண் அளவு |
௨ந | முந்திரி | 1/320 |
அரைக்காணி | 1/160 | |
அரைக்காணி முந்திரி | 3/320 | |
காணி | 1/80 | |
கால் வீசம் | 1/64 | |
அரைமா | 1/40 | |
அரை வீசம் | 1/32 | |
முக்காணி | 3/80 | |
முக்கால் வீசம் | 3/64 | |
ஒருமா | 1/20 | |
மாகாணி (வீசம்) | 1/16 | |
இருமா | 1/10 | |
அரைக்கால் | 1/8 | |
மூன்றுமா | 3/20 | |
மூன்று வீசம் | 3/16 | |
நாலுமா | 1/5 | |
கால் | 1/4 | |
அரை | 1/2 | |
3/4 | முக்கால் | 3/4 |
தமிழ் எண் வரலாறு :
எண் என்பது எண்ணிக்கை. பொருள்களை முழு-எண்களாகவும் பின்ன-எண்களாகவும் மக்கள் எண்ணுகின்றனர்.
எண்ணுப்பெயர் :
தொல்காப்பியர் முழு எண்களை எண்ணும் சொற்களைக் குறிப்பிடுகிறார். அவை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் எனப்பத்தின் மடங்குகளாக உள்ளன. திருக்குறளில் 954 ஆம் குறளில்,
“அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்”
கோடி என்னும் எண் குறிப்பிடப் படுகிறது. கோடி என்னும் சொல் கடைசி எல்லையைக் குறிக்கும். கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவை அந்த எண்கள்.
பின்னம் :
ஒன்றிற்குப் பின்னே உள்ள எண்களைப் பின்னம் என்கிறோம். பின்னே உள்ளது பின்னம். தொல்காப்பியர் அரை, கால் முதலான பின்ன எண்கள் ஒன்றரை என்பது போல் முழு எண்ணோடு புணர்வதையும், காலே அரைக்கால் என்பது போல் பின்னத்தோடு பின்னம் புணர்வதையும் குறிப்பிடுகிறார்.
எண் குறியீடு :
எண்ணுப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் எண் குறியீடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை. 30 எழுத்துக்களால் உணர்த்தப்படும் தமிழ் மொழியைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. எண் குறியீடு இந்த 30 எழுத்துக்களுக்கு அப்பாற்பட்டது.
கணவன் பொருள் தேடி வரச் செல்கிறான். மனைவி அவன் சென்று எத்தனை நாள் ஆயிற்று என அறிய ஒவ்வொரு நாளும் விடிந்தெழுந்தவுடன் சுவரில் தனித்தனிக் கோடுபோட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோட்டையும் விரலால் தொட்டு எண்ணிப்பார்க்கிறாள். – எவ்வாறு திருக்குறள் ஒன்று குறிப்பிடுகிறது. திருக்குறள் 1261 எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு வேறு வழி ஏது?
மதுரைக் கணக்காயனார் போன்ற புலவர்களும், மதுரை வேளாசான், முக்கால் ஆசான் நல்வெள்ளையார், மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் என ‘ஆசிரியர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ள புலவர்களும் எண் – கணக்கைக் கற்பித்துவந்த சங்ககாலப் புலவர்கள்.
எண் குறியீடு பற்றிய சான்று :
தமிழரின் எண் குறியீடு எப்படி இருந்தது என்பதைக் காட்டும் செய்தி 13-ஆம் நூற்றாண்டு ஒட்டக்கூத்தன், புகழேந்தி ஆகிய புலவர் காலத்து ஔவையார் பாடலில் உள்ளது.
அவர் ‘அவலட்சணமே’ என்னும் சொல்லால் ஒருவனைத் திட்டும்போது ‘எட்டேகால் லட்சணமே’ என்று திட்டுகிறார். ‘அ’ என்னும் எழுத்து எட்டைக் குறிக்கும். ‘வ’ என்னும் பின்ன-எண் எழுத்து ‘கால்’ என்னும் பின்ன எண்ணைக் குறிக்கும். எனவே எட்டேகால் லட்சணம் என்பது அவலட்சணம் என்னும் பொருளை உணர்த்தும். ஒன்று என்னும் முழுமையைப் பின்னோக்கிப் பகுக்கும் போது தமிழர்கள் இரண்டு வகையான பாகுபாடுகளைக் கடைப்பிடித்துள்ளனர்.
பகுப்புப் பெயர்கள் :
- ஒன்று என்னும் முழுமையை இரண்டு இரண்டாகப் பகுத்துக்கொண்டு செல்லும் முறைமை. இதில்
அரை – ½
கால் – ¼
அரைக்கால் – 1/8
வீசம் (அல்லது) மாகாணி – 1/16
அரைவீசம் – 1/32
கால்வீசம் – 1/64
அரைக்கால்வீசம் – 1/128
எனப் பின்னத்தின் பெயரும் குறியீடும் அமையும். - ஒன்று என்னும் முழுமையை முதலில் ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்லும் முறைமை. இதில்
நான்மா – 1/5
இருமா – 1/10
ஒருமா – 1/20
அரைமா – 1/40
காணி – 1/80
அரைக்காணி – 1/160
முந்திரி – 1/320
எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும்.
இங்கே தரப்பட்டுள்ள படங்களைப் பார்த்து இந்த விளக்கங்களையும் அவற்றின் தமிழ்எண் குறியீடுகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படப்பதிவுகள் 1954-ல் பதிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும்.