லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்!

லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்!

‘இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948’ என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்கு தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும், சிங்களத் தேசியவாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். இச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>