சிங்கபுரம் ரங்கநாதருக்கு மண்டபம் கட்டிய மன்னன் குறித்த கல்வெட்டு!

சிங்கவரம் ரங்கநாதருக்கு கருங்கல் மண்டபம் கட்டிய மன்னன் குறித்த கல்வெட்டு!

சிங்கவரம் ரங்கநாதருக்கு கருங்கல் மண்டபம் கட்டிய மன்னன் குறித்த கல்வெட்டு!

செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் சுவாமிக்கு கருங்கல் மண்டபம் கட்டி புண்ணியம் தேடிய பழங்கால மன்னரின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ஊராட்சி சாவடிப் பகுதியில் பழைமையான கருங்கல் மண்டபம் உள்ளது. கி.பி. 1755-இல் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டு ஓவியங்கள் இருந்து அழிந்துள்ளன. மேலும், மண்டபத்தின் சிறப்பு குறித்து இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மண்டபத்தின் கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தில், இன்றளவும் தை அமாவாசையில் சிங்கவரம் சுவாமி ரங்கநாதர் வருகை தருவதாக நம்பிக்கை வைத்து, கோயில் உற்சவரைக் கொண்டு வந்து விழா நடத்தி அன்னதானம் செய்கின்றனர். மண்டபத்தின் எதிரே பாறையின் இடையில் நீர் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சரிவான பகுதியில் தடுப்புச் சுவரை கட்டமைத்து தண்ணீரைச் சேமித்து வைத்துள்ளனர்.

அண்மையில் ஆய்வு செய்தபோது, மண்டபத்தின் விதானத்தில் (மேல் கூரை) நேரிசை வெண்பாவால் எழுதப்பட்ட கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. இது சாலிவாகன சகாப்தம் 1677ஆம் ஆண்டு, கலியுக ஆண்டு 4850 என்று குறிப்பிடுகிறது.

இதற்கு பொதுவான ஆண்டு கிபி 1755-ஆகும். இந்த மண்டபம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிங்கவரம் அரங்கநாதருக்காக கட்டி புண்ணியத்தை பெறுவதற்காக, வங்கார வன்னிய குலத்தைச் சேர்ந்த மன்னப்பன் என்கிற மன்னன் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி செய்துள்ளதால், இதனை மேலும் ஆய்வு செய்து வருகிறோம். இந்தக் கல்வெட்டு நீண்ட காலமாக வெளியே தெரியாமல் இருந்துள்ளது.

சிங்காரமான சிங்கபுரம் ரங்கருக்கு.. கட்டினான் மண்டபத்தை வங்கார மன்னன் பெரும்சுமையாய்.. மண்டபம் கட்டிய புண்ணியத்தைப் பார்த்தீரா… என்று பாடலாக அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>