ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே ரோமானிய மண்பாண்டம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!

ராஜபாளையம் அருகே சங்ககால மக்கள் பயன்படுத்திய ரோமானிய மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட எல்லையில், ராஜபாளையம் அருகே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்தில் தேவியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும், தொல்லியல் துறை ஆய்வாளருமான கந்தசாமி குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சங்ககால மக்கள் பயன்படுத்திய ரோமானிய மண்பாண்டங்களின் ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து கந்தசாமி கூறுகையில், ‘‘தேவியாற்றின் கரையோர விவசாய நிலங்களில், அழகாய்வு செய்ததில் சங்ககால மக்கள் பயன்படுத்திய ரோமானிய மண்பாண்டங்களின் ஓடுகள் கிடைத்துள்ளன. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய நந்தி சிற்பம், பழமையான விநாயகர் சிற்பம், அழகிய கல்தூண் மற்றும் கல்வெட்டு கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டில், மக்கள் வசிக்கும் பகுதியில், பாண்டிய நாட்டின் ராணுவப்படை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கபட்டிருந்ததாக எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மதுரையிலிருந்து கேரளா செல்ல முக்கிய வழியாக மாங்குடி கிராமம் இருந்துள்ளது ’’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: