திருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு!

திருப்பூர் கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு !

திருப்பூர் கோவை மாவட்ட எல்லையில் தமிழ் எழுத்துகளுடன் புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு !

திருப்பூரைச் சேர்ந்த வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் மேற்கொண்ட ஆய்வில், திருப்பூர் – கோவை மாவட்ட எல்லையில் தமிழ் இலக்கியங்களில் தென்சேரி மலை எனப்படும் செஞ்சரிமலையை அடுத்த எஸ்.குமார பாளையத்தில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய புலிக்குத்திக்கல்லை கண்டெடுத்துள்ளனர்.

ஆய்வு மையத்தின் இயக்குநர் கூறியதாவது :

பண்டைய காலத்தில், பிற செல்வங்களைவிட கால்நடையே செல்வமாகக் கருதப்பட்டது. ‘மாடு’ என்ற சொல், செல்வம் என்ற பொருளில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது.

நுண் கற்காலம் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்காமல், நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்ட பண்டைய தமிழ்ச் சமூகம், புதிய கற்காலத்தில் (கி.மு.3000) தமது இனக் குழுவுக்கென குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு நிலையாக வாழத் தொடங்கியது இக்காலத்தில் தான், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். மேலும், கால்நடைகளைப் பண்டமாற்று பொருளாகப் பயன்படுத்தி, தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

சாவா மூவாப் பேராடு :

இனப் பெருக்கம் காரணமாக அழியாச் சொத்தாக இருக்கக் கூடியவை என்பதை ‘சாவா மூவாப் பேராடு’ என்ற சோழ நாட்டு கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அழியாச் சொத்தாக விளங்கும் கால்நடைச் செல்வங்களைக் கொன்று, தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எடுக்கப்பட்ட நடுகல் ‘புலிக்குத்திக்கற்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இங்கு கிடைத்துள்ள நடுகல் 110 செ.மீ. உயரமும், 75 செ.மீ. அகலமும் கொண்டது. அதன் கீழ்ப்பகுதியில் தமிழில் மூன்று வரிகளைக் கொண்ட செய்தி உள்ளது. அதில், புலிக்குத்தி பொடாறப்பகவுண்டன் என்று உள்ளது. புலியைக் குத்தி வீரமரணம் அடைந்த செய்தியை கூறுகிறது. எழுத்து அமைப்பை பார்க்கும்போது, இந்த நடுகல் கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுகல்லின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் எடுத்துகூறி, நடுகல்லைப் பாதுகாக்க வேண்டும். இதையடுத்து, கிராம மக்கள் நடுகல்லுக்கு கோயில் அமைத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>