பொள்ளாச்சி அருகே பழமை வாய்ந்த துாரிக்கல் கல்வெட்டுமற்றும் சதிக்கல் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது:
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
பொன்னாக்காணி கிராம ரோட்டோரத்தில், செவ்வாய் குன்று எனப்படும் சிறிய கரட்டுக்குன்று உள்ளது. ஒன்றின் மேல் ஒன்றாக கவிழ்ந்த நிலையில் உள்ள பாறைகளையொட்டி சுவரெழுப்பி கருவறையாக உருவாக்கியுள்ளனர். கருவறையில் நின்ற கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். கருவறையை அடுத்து இடை நாழியில் ஐம்பொன் திருமேனியும், காவடியும் உள்ளது. கோவிலின் முன்புறம் உள்ள பெயர் பலகையில், ‘ஸ்ரீ வைய்யமலை இடும்பன் துணை’ என காணப்படுகிறது. வைய்யமலை என்பது பழநி மலையின் ஒரு பெயரான வையாபுரியை குறிக்கலாம்.
குன்றின் மேலே அகன்ற நிலப்பரப்பில் பலகை கல்லில் ஆன நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது. இதில், மூன்று மனிதர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மூவருக்குமே கால்களில் கழல்கள்; எடுப்பான தோற்றத்தில் ஆடைகள் அமைந்துள்ளன. மூவரும் ஒரு பீடத்தின் மீது நிற்பது போல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த மூவரின் இடப்பக்கங்களிலும் மூன்று சிறிய மனித உருவங்கள் உள்ளன. இந்த இடம் வழிபாட்டில் உள்ளது. இந்த நடுகல் வேறொரு இடத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டிருக்கலாம். முன்னர் இது இருந்த பகுதியில், கோவில் போன்றதொரு அமைப்பை கட்டுவித்த அந்த ஊர் ஜமீன்தாரின் குடும்ப சிற்பமாக இருக்க வாய்ப்புண்டு அல்லது இதே பொன்னாக்காணியை சேர்ந்த ஒரு ஜமீன்தாரின் குடும்ப சிற்பமாக இருக்க வேண்டும். இடும்பன் கோவிலோடு ஜமீன்தார் சிற்பங்களை தொடர்புபடுத்த இயலாது.
கோவில் வாயில் அமைக்கப்பட்டுள்ள மூன்று கல் ஊஞ்சல்களில், பெரிய ஊஞ்சலின் ஒரு துாணில் சற்றுத்தெளிவான கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில், வையாபுரி பண்டாரத்தின் மகன் முத்துக்குமார பண்டாரம் இந்த ஊஞ்சலை அமைத்து கொடுத்துள்ளதாக உள்ளது. இவரது ஊர் பெயரை குறிக்கும் கல்வெட்டு எழுத்துக்கள் தெளிவின்றி உள்ளதால், கொடையாளி எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. நடுகல் ஆராய்ச்சி பற்றிய தகவல்களுக்கு ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி பூங்குன்றன் உதவி செய்தார்.