கீழடி அகழ்வாயில் கிடைத்துள்ள மீன் சின்னம் பொரித்த சுடுமண் உறை கிணறு கங்கை சமவெளியுடனான வணிக தொடர்பை சொல்லும் முத்திரை நாணயமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கீழடி பணிகளை பார்வையிட்ட தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழ்வாய்வு குழுவினர்களை மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படுவதாகவும் மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 7ஆம் கட்ட அகழ்வராய்ச்சி முடிவடைந்தது. 6கட்ட அகழ்வராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பதினைந்தாயிரத்திற்கும் அதிக பொருட்கள் மூலமாக இரண்டாயிரது அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் எழுத்தறிவு மிக்கவர்களாகவும் நவநாகரிக வாழ்வியலுக்கு சொந்தக்காரர்களாகவும் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டன. 7ஆம் கட்ட அகழாய்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் கூறினார்.
இதுவரை எத்தனையோ உறை கிணறுகள் கிடைத்திருந்தாலும் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறை கிணறு கிடைப்பது இதுவே முதல்முறை என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதேபோல முத்திரை நாணயமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினகரன்