‘ஆண்டாள் என்ற பெண் கட்டிய, பெருமாள் கோவில் பற்றிய கல்வெட்டு கிடைத்துள்ள நிலையில், கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை’ என, ‘அறம்’ வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்து உள்ளனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இது குறித்து, அந்த ஆய்வு மைய தலைவர், கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், இருது கோட்டையில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டு பிடித்தோம்; அப்பகுதியை, தர்மத்தாழ்வார் என்ற, பூர்வாதராயர் மன்னன் ஆண்டுள்ளான். அவனின் நன்மைக்காகவோ, வெற்றிக்காகவோ, வெம்பற்றுார் மாங்களூரைச் சேர்ந்த ஆண்டாள் என்ற பெண், பெருமாள் கோவில் ஒன்றை கட்டியதாக, தகவல் உள்ளது.
அந்த கோவில், தற்போது இல்லை. அக்காலத்தில், சாதாரண பெண்களுக்கும், கோவில் கட்டும் உரிமை இருந்ததை, அக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டு, சிதையும் நிலையில் உள்ளது. அதை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். அப்பகுதியில் ஆய்வு செய்தால், பெருமாள் கோவில் இருந்ததற்கான தடயங்களையும் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.