பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?

பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?

பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?

பெரியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு காங்கிரசு கட்சிக்குள் போராடி வந்ததாக பெரியாரியவாதிகள் இன்றளவும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர் . பெரியார் வேலை வாய்ப்புக்கு போராடியிருக்க வில்லையென்றால் தமிழர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு தான் வாழ்ந்திருப்பார்கள் என்று நா கூசாது புளுகி வருகின்றனர்.

1925இல் நடந்த காஞ்சிபுரம் தமிழ் மாகாண மாநாட்டில் பெரியார் கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் என்பது வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு அல்ல என்பதே இதன் உண்மையான வரலாறாகும் .


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் என்ன ? அதுகுறித்து இனி விரிவாகக் காண்போம்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (communal representation ) என்பதற்கு சரியான பொருள் தேர்தல் மூலம் பெறும் அரசப் பிரதிநிதிகளின் ஒதுக்கீடு . அதாவது தேர்தல் தொகுதி ஒதுக்கீடு என்பதாகும் . 1909இல் மிண்டோ – மார்லி சிர்திருத்தத்தின் படி இஸ்லாமியர்களுக்கும் மற்றவர்களுக்கும் தனித் தொகுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது .

அதைப் போன்று பார்ப்பனரல்லாதாருக்கும் வழங்க வேண்டும் என்று நீதிக்கட்சி கேட்டுக்கொண்டது . அப்போது நீதிக்கட்சியை சமாளிக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியிலும் ‘சென்னை மாகாண சங்கம் சங்கம் ‘ பெயரில் ஒரு பார்ப்பனரல்லாத அமைப்பு உருவாக்கப்பட்டது . இதில் திரு .வி. கல்யாண சுந்தரனார், ஈ.வே. ராமசாமி, வரதராஜுலு, கேசவ பிள்ளை ஆகியோர் உறுப்பினராக இருந்து செயல்பட்டனர்.

இந்நிலையில், இந்தியர்களுக்கு அரசு நிர்வாகத்திலும் , சுயாட்சி அமைப்புகளிலும் பங்கு வைக்கும் வகையில் வகையில் அரசியல் சீர்திருத்தம் செய்வதற்காக 14.12.1917இல் மாண்டேகு சென்னை வந்தார் . அவர் தொகுதி ஒதுக்கீடு கோரிக்கையை நிராகரித்தார்.

அவருக்குப் பின் இங்கிலாந்து அரசு கூட்டுத் தேர்வு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி தொகுதி ஒதுக்கீடு கோரிக்கையை 17.11.1919இல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. ஆங்கில அரசு , நீதிக்கட்சி, சென்னை மாகாண சங்கம் ஆகிய மூன்றும் ஒன்று கூடி கீழ்க்கண்ட முடிவாக அறிவித்தன.

சென்னை மாகாண சட்டமன்றத்தின் மொத்த தொகுதிகள் 98. அதில் பொதுத் தொகுதிகள் 63 . அதில் 28 தொகுதிகள் வரும் தேர்தலில் பார்ப்பனர் அல்லாதாருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் என்பது பார்ப்பனரல்லாதாருக்குத் தனித் தொகுதி ஒதுக்கீடு வழங்கி நடத்தப்பட்ட முதல் தேர்தலாகும். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் காரணமாக அத்தேர்தலை காங்கிரசு கட்சி புறக்கணித்தது. அதன் காரணமாக காரணமாக நீதிக்கட்சி எளிதாக வென்றது . அப்போது ஆங்கிலேயரின் ஆசியோடு நீதிக்கட்சி 1921ஆம் ஆண்டு முதல் 1924ஆம் ஆண்டு வரை மூன்று சட்டங்களை நிறைவேற்றியது.

{கம்யூனல் ஜி.ஓ. 613 (1921) , கம்யூனல் ஜி.ஓ. 658 (1922), கம்யூனல் ஜி.ஓ. 761 (1924)}

இதில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும் அடங்கும் .

1924க்கு முன்னர் நீதிக்கட்சி மூலம் மூன்று சட்டங்கள் வந்த பிறகு 1925இல் காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டிருக்க வாய்ப்புண்டா?

ஒருவேளை இது கேட்டது உண்மை எனில் , நீதிக்கட்சியின் இந்த மூன்று சட்டங்களை 1925க்கு முன்னர் எதிர்த்ததாகவோ, விமர்சித்ததாகவோ சான்று காட்ட முடியுமா ?

1926ஆம் ஆண்டில் சுப்பராயன் அவர்களின் முதல் தமிழர் அமைச்சரவையில் பங்கு வகித்தவர் முத்தையா முதலியார் . அவரால் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டுச் சட்ட ஆணை கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த முத்தையா முதலியாரை ஓஹோவென்று பெரியார் புகழாரம் சூட்டுகிறார் தவிர , அவரையும் ஒரு போதும் விமர்சித்ததில்லை .

காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியாரின் தீர்மானத்தை படித்துப் பார்த்தாலும் பார்த்தாலும் அது தொகுதி ஒதுக்கீடு தான் என்பது புரியும் . அது வருமாறு:

” தேசிய முன்னேற்றத்துக்கு இந்து சமூகத்தாருக்குள் பரஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும் ஏற்பட வேண்டுமாகையால் ராஜ்ய சபைகளிலும் , பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர் பிராமணர் அல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடுக்கு ஏற்ப தங்கள் தங்கள் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் “.

காஞ்சிபுரம் மாநாட்டில் தலைமை வகித்த திரு.வி.க.வும் கூட காங்கிரசு கட்சியின் தேர்தல் புறக்கணிப்பைக் காரணமாகச் சொல்லி தொகுதி ஒதுக்கீட்டுக்கு காங்கிரசில் வாய்ப்பில்லை என்பதை பின்வருமாறு விளக்குகிறார் :

“சட்டசபை வேலைகளை காங்கிரசே மேற்கொள்ள வேண்டும் என்றத் தீர்மானம் நிறைவேறாத படியாலும், அவ்வேலையை நடத்த சுயராஜ்ஜியக் கட்சிக்கு அதிகாரம் கொடுத்து இருப்பதாலும் இருப்பதாலும் , சட்டசபை வேலைக்கே உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி காங்கிரசு மாநாடு யோசிக்க உரிமையில்லை. சுயராஜ்ஜிய கட்சி மாநாட்டிலேயே இதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என்பதால் (பெரியாரின்) தீர்மானங்களை நிராகரித்து விட்டேன்”.

திரு.வி.க. பெரியாரின் தீர்மானத்தை தான் புறக்கணித்த காரணத்தை விளக்கியும் கூட பெரியாரின் வேலைவாய்ப்புத் தீர்மானத்தை திரு.வி.க. கெடுத்து விட்டார் என்றும், அவரை பெரிய துரோகி என்றும், பெரியார் தண்ணீர் குடிக்கப் போன போது கள்ளத்தனமாக தள்ளுபடி செய்துவிட்டார் என்றும் பெரியாரியவாதிகள் வசைமாரி எழுதி வருவது வேடிக்கையாக உள்ளது.

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது நீதிக்கட்சி பெற்றடுத்த பிள்ளை. பிள்ளை இல்லாதவள் மாற்றாள் பிள்ளையை தான் பெற்ற பிள்ளையாகச் சொல்வது நேர்மையா ?

எனவே திரு.வி.க. வஞ்சகர் அல்லர்; 1920லேயே இங்கிலாந்து அரசு தொகுதி ஒதுக்கீடு கொண்டு வந்துவிட்டது. இதுவும் கூட பெரியாரின் கண்டு பிடிப்பு அல்ல.

பெரியார் 1925ல் கேட்டதெல்லாம் ஜனத்தொகைக்கேற்ப சட்டசபைத் தொகுதி ஒதுக்கீடு தானே தவிர, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அல்லவே அல்ல! அல்லவே அல்ல!

(“தமிழர் எழுச்சி” இதழாசிரியர் முருகு.இராசாங்கம் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது.)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: