திருச்சி அருகே பல்லவர் கால சிவன் கோயில் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே பல்லவர் கால சிவன் கோயில் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே பல்லவர் கால சிவன் கோயில் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே கண்ணுகுளம் கிராமத்தில் பல்லவர் கால சிவன் கோயிலின் தொன்மை சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கண்ணுகுளம் கிராமத்தில் களஆய்வு மேற் கொண்ட போது பழமையான சிவன் கோயிலின் கட்டுமான சிதைவுகளும், முற்கால மக்கள் பயன் படுத்திய மண்பாண்ட ஓடுகள், முதுமக்கள் தாழியின் உடைந்த பாகங்கள் மற்றும் சிதைந்த நிலையில் சிவலிங்கம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கண்டறியப்பட்ட சிவன் கோயில் முன்பு இருந்ததாக கருதப்படும் இடம் பரா மரிப்பின்றி முட்புதர்கள் மண்டிய நிலையில் காணப்படுகிறது.

இங்கு மண்ணில் புதைந்த நிலையில் கோயில் அதிட்டானத்தில் காணப்படும் யாழிவரிசை சிற்பங்களும், கபோதத்தின் கூடுகளில் மனித உருவம் செதுக்கப்பட்ட சிற்பங்களும், பூதகண சிற்பத் தொகுதிகளும் காணப்படுகின்றன. அருகில் மண் மூடிய நிலையில் உள்ள கிணறு அருகே பெரிய அளவிலான கற் பலகைகளும், உடைந்த சிற்ப வரிசை களும் புதைந்து காணப்படுகிறது. இங்கிருந்து கீழ் திசையில் முற்கால அய்யனார் கோயில் உள்ளது. இங்கு புதைந்த நிலையில் சிற்பங்கள் காணப் படுகின்றது. இதில் 2 சிங்கங்கள் தனது முன்னங்கால்களை சிவலிங்கத்தின் மீது வைத்த நிலையிலும் அதை தொடர்ந்து இரு சிங்கங்கள் அமர்ந்த நிலையிலும் மற்றொரு சிற்பத்தில் பூதகணங்கள் வரிசையாக அமர்ந்த நிலையிலும் பிடாரியுடன் மூடிய சிங்கம் தனது முன்னங்காலால் பூத கணத்தை தொட்டவாறு நின்றுள்ளது.

இது பல்லவர் கால சிற்பகலை அமைப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கு கண்டறியப்பட்ட சிற்பங்களை ஆராயும் போது இவை பல்லவர் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருத நேரிடுகிறது. இப்பகுதியில் ஏற்பட்ட போரினால் அல்லது சமய பூசல்களால் இக்கோயில் அழிக்கப் பட்டிருக்கலாம் என இங்கு கிடைத்திருக்கும் தொன்மை சான்றுகளால் அறிய முடிகிறது. தொல்லியல் துறையினர் இங்கு ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. இக்கோயில் கிபி 695க்கு பின் கட்டப்பட்டதாக இருக்கக்கூடும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: