தமிழர் குமுகத்தில் சங்ககாலத்திற்குப் பிறகு சமணத்தின் தாக்கத்தில் உருவான சாதியம்!

தமிழர் குமுகத்தில் சங்ககாலத்திற்குப் பிறகு சமணத்தின் தாக்கத்தில் உருவான சாதியம்!

தமிழர் குமுகத்தில் சங்ககாலத்திற்குப் பிறகு சமணத்தின் தாக்கத்தில் உருவான சாதியம்!

அமெரிக்கத் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து பல ஆய்வறிக்கைகளைப் பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்களில் சமர்ப்பித்திருக்கிறார். அதில் ஒரு முக்கியமான கட்டுரை “தமிழர் குமுகத்தில் சங்ககாலத்திற்குப் பிறகு சமணத்தின் தாக்கத்தில் உருவான சாதியம்” (On The Unintended Influence Of Jainism On The Development Of Caste In Post-Classical Tamil Society https://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf ). அதில் அவர் மிகத் தெளிவாகச் சங்ககாலத்தில் பழந்தமிழர்களிடம் சாதி தீண்டாமை இருந்ததில்லை சமணர்கள் ஆரியர்கள் வந்த பிறகே தீண்டாமை என்று ஒன்று வந்தது என்று ஆதாரத்துடன் நிரும்பிதந்திருக்கிறார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அண்மையில் எழுதிய மற்றொரு ஆய்வறிக்கையில் புறநானூற்றில் 335 ஆம் பாடலில் வரும் ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியுமில்லை’ என்ற வரிகளை வைத்து பறையர் என்பது ஒரு சாதி அல்ல, ஒரு குடி என்றும், “சாக்கை பறையனார்” என்ற படைத்தலைவன் மகேந்திரவர்மன் படையில் தலைவராக இருந்ததாகவும், ‘பறையனார்’ என்று உயர்ந்த பன்மையில் குறிப்பிடப்படும்பொழுதே அவர் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார் என்பதைச் காட்டுவதாகவும், அதேபோன்று பாண்டிய நாட்டுக் கல்வெட்டிலும் அரசனுக்கு அணுக்க அலுவலராக ஒரு பறையன் இருந்ததாகவும் கூறி பழந்த்தமிழர் வாழ்வில் சாதியோ தீண்டாமையோ இருந்ததில்லை என்று நிரூபிக்கிறார். வந்தேறிகளின் படையெடுப்பிற்குப் பிறகு தமிழன் சாதி சகதியில் வீழ்த்திருக்கிறான். இவ்வாறான அவரின் ஆய்வுக்கட்டுரைகளை இதுவரை யாரும் மறுப்பு எழுதவில்லை.

உலகெங்கும் சென்று வணிகம் செய்திருக்கிறான் தமிழன். சீனாவின் துறைமுக நகரங்களில் இன்றளவும் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகிறது என்கிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முந்தைய ஆலய மணி ஒன்று நியூசிலாந்தில் 1836 ஆண்டுக் கண்டெடுப்பக்கப்பட்டு அந்த நாட்டு தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. (https://www.booksfact.com/history/600-years-old-tamil-bell-new-zealand.html) 600 ஆண்டுகளுக்கு முன்னர் நியூஸிலாந்தோடு கடல் வணிகம் செய்திறார் தமிழர்கள் என்று அதை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். இப்படி உலகமெங்கும் வணிகம் செய்த தமிழன் எப்படிக் கல்வி அறிவற்றவனாக இருந்திருக்க முடியும். பொருட்பாலில் அரசியல் கண்ணோட்டம் என்ற அதிகாரம் எழுதிய வள்ளுவனுக்கு முந்தைய எத்தனை தலைமுறை அந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தால் அவர் அதை 3 அடிகளில் எழுதியிருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தங்களை ஆண்ட அரசர்களில் ஒருவன் முல்லைக்குத் தேர்கொடுத்தான், ஒருவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான், பசுவை கொன்ற குற்றதிகாகத் தன் மகனையே தேர்க்காலில் இட்டான் ஒருவன், புறாவுக்காகத் தன் தொடை கறியை கொடுத்தான் ஒருவன் என்ற கதைகளைத் தங்கள் சந்ததியினருக்கு வழிவழியாகக் கடத்திவரும் இந்த இனம் எப்படிக் காட்டுமிராண்டி இனமாக இருந்திருக்க முடியும்?. தாய் வழி சமூகமாக இருந்து வேலு நாச்சியார் என்ற விதவை தாயை தங்களை ஆளும் அரசியாக ஏற்றுக்கொண்ட தமிழ் சமூகம் எப்படிப் பெண்களைக் கேவலமாகப் பார்க்கும் சமூகமாக இருந்திருக்க முடியும்?

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: