ஓசூர் அருகே, அணுசோனையில் உள்ள, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் புலி குத்திப்பட்டான் நடுகல்லை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகேயுள்ள, அணுசோனை என்ற ஊரில், ராஜேந்திர சோழனின், 28ம் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த, கல்வெட்டு மற்றும், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புலி குத்திப்பட்டான் நடுகல் போன்றவை, பாதுகாப்பின்றி உள்ளன.
அணுசோனையில், சாலையின் வலது பக்கம், கல்வெட்டும், நடுகல்லும், பாதி புதைந்த நிலையில் உள்ளன. அவை, தொல்லியல் துறையால், 1975ல், பதிவு செய்யப்பட்டவை. நடுகல்லில் உள்ள, வீரனின் வலது கையில் ஓங்கிய வாளும், இடது கையில் குறுவாளால், தன் மீது பாய வரும் புலியை குத்துவது போன்ற சிற்பம் உள்ளது. அக்கல்வெட்டு, கங்கையையும், கடாரத்தையும், பூர்வ தேசங்களையும் வென்று திரும்பிய கோப்பர கேசரியான, ராஜேந்திர சோழனின், 28வது ஆட்சியாண்டில், அதாவது, கி.பி., 1040ல், செதுக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது. கங்க மார்த்தாண்ட ஆடவர்சாமி என்ற வீரன், கோவில் நிலத்தில் உழுத போது, தன்னை தாக்க வந்த புலியை குத்தி கொன்று விட்டு மாண்டான் என, கூறப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை, தொல்லியல் துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறினர்.