பொள்ளாச்சி அருகே, பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே, பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே, பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே, காட்டம்பட்டி பெருமாள் கோவிலில், 189 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டி பெருமாள் கோவில் கல்வெட்டை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை சுந்தரம், தேவனாம்பாளையம் வரலாற்று ஆர்வலர் ருத்திரன் ஆய்வு செய்தனர்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: காட்டம்பட்டி பெருமாள் கோவில், கருவறைச் சுவரிலும், அர்த்த மண்டபச்சுவரிலும் கோட்டங்களும், அரைத்துாண்களும் கொண்ட அமைப்பு இல்லை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கல்வெட்டில், மீன் மற்றும் குதிரை உருவமும் புடைப்புச் சிற்பமாக காணப்படுகின்றன. கருவறைச் சுவரிலுள்ள, கல்வெட்டில், கலியுக, மற்றும் சாலிவாகன சகாப்தம் ஆகிய கால குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில், கலியுக ஆண்டு, 4930 என்பதாகவும், சக ஆண்டு, 1751 என்பதாகவும் குறிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டு குறிப்பும் கிறிஸ்துவ ஆண்டான கி.பி., 1829 ஆண்டோடு பொருந்துகிறது. கால குறிப்புகள் அனைத்தும் பிழையின்றி பொருந்துவதால், 189 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வெட்டு எழுதப்பட்டது உறுதியாகிறது. கல்வெட்டில், காட்டம்பட்டி வரதராயப்பெருமாள் கோவில் எனவும், களந்தையைச் சேர்ந்த ராம நாயக்கன், கி.பி., 1829ல், கோவில், அர்த்த மண்டபத்தை கட்டியதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் போது, அங்கிருந்த செங்கல் கட்டுமான கோவில்களை கல் கட்டுமானமாக புதுப்பித்துள்ளனர். அவ்வகையில், களந்தையை சேர்ந்த நாயக்கர் தலைவர் ராம நாயக்கர் இக்கோவிலை புதுப்பித்துள்ளார். கோவிலை புதுப்பித்து பராமரித்தால், பழமையை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: