தமிழீழம் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, சகாயசீலி பேதிருப்பிள்ளை (1967 சனவரி 01 பிறந்தார்), எமது சமூகத்தில் பெண் ஒருவர் எப்படி இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை முறியடித்து,
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு 1984 முதல் பெண்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டனர்.
விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன. நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.
இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையது தான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூடு சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.
தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். 10.10.1987 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப் போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15 கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது எம்16ஐ அணைத்துப் பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.
வானம் கரிய இருளைச் செரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நட்சத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய் வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி. அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.
எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.
அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று (10.10.1987) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய், கிறேசர் வீதியில் காத்திருந்தாள். 1987 அக்டோபர் 10 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும் அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின.
விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீராக 2 ஆம் லெப் மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது ‘என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ’
எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர் கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். காயமடைந்த பின் இராணுவத்தின் கரங்களில் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காக கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டாள்.
அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது. உலகின் சரி பாதி மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள் ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும், விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை பெண்களிடம் விதைத்து, விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைத்தவர் தேசியத் தலைவர் அவர்கள்.
விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேச விடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற தேசியத் தலைவரின் எண்ணம், பெண் புலிகள் என்ற தோற்றமாயிற்று.
ஆணும் பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது இக்கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் பலதடவை குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.
பெண்போராளிகள் ஆண்போராளித் தளபதிகளின் கீழ் செயற்பட்டாலும் 90-களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இராணுவ படையணியாக மட்டுமல்லாது, தொழினுட்பத்துறை, பொறியியல்துறை, மருத்துவம், கடற்படை, அரசியல், நிர்வாகக்கட்டமைப்பிலும் ஆண்போராளிகளுக்கு நிகராகவே உள்ளனர்.
1987 அக்டோபர் 10 அன்று என்ற இரண்டாம் லெப். மாலதி, ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் வீராங்கனையாக சிறப்பிக்கப்பட்டு மாலதி படையணியும் உருவாக்கப்பட்டது.
முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.
எத்தனையோ மாவீரர்களும் வீராங்கனைகளும் விடுதலைப் போரில் உயிர் துறந்தாலும், அவர்களின் உயிருக்கு பரிசாக தமிழீழம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையுடன், ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து உலக தமிழர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.
மாவிரர்களின் நினைவிடங்கள் கல்லறைகள் அனைத்தையும் சிங்களம் நிர்மூலமாக்கினாலும் கூட, அவற்றிற்கு உயிர் கொடுத்து நினைவில் நிற்க வைக்க வேண்டியது நாடு வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தமிழர்களின் கடமையுமாகும். மாவீரர்களை நினைவு கூர்ந்து எமது இலட்சியம் நிறைவேற பலம் சேர்ப்போம்.