1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

பல்லவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வரும் 12- ம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கிறது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரையே. குலோத்துங்கச் சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜனின் படைத் தளபதியான திருச்சிற்றம்பலமுடையான் என்ற நம்பிப் பல்லவராயன், பாண்டிய நாட்டின் மீது போர் செய்ய, சென்று திரும்பியபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கண்டு வியந்து, கோயிலுக்குள் சென்று அன்னை மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரரைத் தரிசித்த அளவில், அவருக்கு மீனாட்சி அம்மனிடம் தணியாத பக்தி ஏற்பட்டது.

தாராசுரம் என்னும் பெரும் கோயில் பணியைச் செய்து முடித்தவர், மன்னனிடம் வேண்டிக் கொண்டு, தன் இஷ்டதெய்வமான மதுரை மீனாட்சிக்கு கும்பகோணத்துக்கு அருகிலேயே கோயில் எடுக்க விரும்பினார். அதற்காக, குளத்தூர் என்னும் ஊரில் இந்தக் கோயிலை எழுப்பினார். தற்காலத்தில் பல்லவராயன்பேட்டை என்று அழைக்கப்படும் இந்த ஊர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து நீடூர் அருள்மிகு வேயுறுதோளியம்மை-சோமேஸ்வரர் திருக்கோயில் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில், நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறாள். கருவறையில் சுந்தரேஸ்வரர் நீண்ட பாணத்தோடு லிங்கமூர்த்தியாகக் காட்சிகொடுக்கிறார். கருவறை சுற்றுச்சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை ஆகியோரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில், இரண்டு சண்டேஸ்வர மூர்த்தி சந்நிதிகள் உள்ளன.

முழுவதும் கருங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9 -ம் தேதி, தொடங்குகின்றன. தொடர்ந்து 10, 11 ஆகிய தேதிகளில் பூஜைகள் நடைபெற்று, 12 -ம் தேதி அன்று, மகா குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமயப் பெரியோர்கள், ஆதீன குருமார்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: