கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில், தொல்லியல் துறையினர், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தி வருகின்றனர். அதில், 2,000 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம், சுடுமண் சிற்பங்களை கண்டுபிடித்தனர். தற்போது, மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவ சுடுமண் காதணி, சங்கு வளையல்கள், அணிகலன்களை கண்டறிந்துள்ளனர். மனித முகம் கொண்ட சுடுமண் சிற்பம், புத்தர் முக வடிவில் அமைத்துள்ளனர்.

சுடுமண் காதணியின் வட்ட பகுதியில், தாமரை மொட்டு போல, ஆறு இடங்களில் வரைந்துள்ளனர். தொடர்ந்து, இப்பகுதியில் பண்டை காலத்தில், பெண்கள் பயன்படுத்திய அழகு சாதன பொருட்கள் கிடைத்து வருவதாக, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: