கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வு மையத்தில் தண்ணீர் தொட்டி போன்ற ஓர் அமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நான்கடி உயரம், ஐந்தடி நீளம் மற்றும் இடண்டடி அகலம் உள்ள இந்தத் தொட்டி தொழில் உற்பத்தி தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் செங்கற்களை விட பெரியதாக உள்ளன. அதன் அருகில் இரும்புத் துகள்களும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு இரும்புப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: